தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கும்ப மேளா: '3 கோடி' பக்தர்கள் புனித நீராடுகின்றனர்

Go down

கும்ப மேளா: '3 கோடி' பக்தர்கள் புனித நீராடுகின்றனர் Empty கும்ப மேளா: '3 கோடி' பக்தர்கள் புனித நீராடுகின்றனர்

Post  meenu Sat Mar 02, 2013 1:00 pm

மஹா கும்ப மேளா பண்டிகையின் முக்கிய நீராடல் தினமான
ஞாயிறன்று கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் 2 கோடி பக்தர்கள்
புனித நீராடியிருக்கின்றனர்.

6 முக்கிய நீராடல் நிகழ்வுகளைக் கொண்ட மஹா கும்ப மேளாதான் உலகின் மிகப் பெரிய மனித ஒன்று கூடல் என்று வர்ணிக்கப்படுகிறது.




தொடர்புடைய பக்கங்கள்







ஞாயிறு காலை சூரியன்
உதயமாகியதிலிருந்தே கூட்டம் கூட்டமாக மக்கள் அலகாபாத்தில் கங்கையும்
யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடினர்.

புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி என்ற
ஆறும் இதே இடத்தில் கலப்பதாக கருதப்படுவதால்தான் இந்த இடத்துக்கு திரிவேணி
சங்கமம் என்று பெயர் வந்தது.

ஞாயிறு ஒரு நாளில் மட்டுமே 3 கோடிப் பேர் மஹா
கும்ப மேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று
எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த மஹா கும்ப மேளா ஜனவரியிலும் பிப்ரவரியிலுமாக 55 நாட்கள் காலத்துக்கு நடக்கிறது.

இந்த காலப் பகுதி மொத்தத்திலும் பார்க்கையில், 10 கோடிப் பேர் இவ்விடங்களில் புனித நீராடுவர் என்று மதிப்பிடப்படுகிறது.

கும்ப மேளா ஆரம்பமான ஜனவரி 14ஆம் தேதியன்று 80 லட்சத்துக்கும் அதிகமானோர் நன்னீராடினார்கள்.

அர்த, பூரண கும்ப மேளாக்கள்


ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற அர்த கும்ப மேளாவின்போது இரண்டு இடங்களில் மக்கள் புனித நீராட முடியும்

அதுவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற பூரண கும்ப மேளாவில் நான்கு இடங்களில் மக்கள் நீராடுவர்.

இந்த முறை வந்திருப்பது 12 பூரண கும்ப
மேளாக்களுக்கு ஒரு முறை வருகின்ற அதாவது 144 வருடங்களுக்கு ஒரு முறை
வருகின்ற மஹா கும்ப மேளா ஆகும்.

புனித நதிகளில் அதிலும் அவை சங்கமிக்கும்
இடத்தில், குறிப்பாக கும்ப மேளாவின்போது குளித்தால் பாவங்கள் அனைத்தும்
கழியும் என்பதும் விமோச்சனம் கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

உத்திரபிரதேசம் மட்டுமல்லாது, நாட்டின் வேறு பல
மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்து இந்துக்கள் இந்தப் பண்டிகையை
முன்னிட்டு இங்கு வந்துள்ளனர்.

சேவைகள்


கும்ப மேளா நடக்கும் ஆற்றங்கரைத் திடல்களில் 14
மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்டிகைக் காலம் ஆரம்பித்தது தொடக்கம்
சுமார் ஒன்றரை லட்சம் பேர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

சளி, இருமல், மூட்டுவலி, தூசு ஒவ்வாமை, சுவாசப்
பிரச்சினை போன்றவற்றுக்காக பெரும்பான்மையானோருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளதாக இங்கு கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

தொலைந்துபோவோரை உறவினர்களிடம் தேடிச் சேர்க்கும் சேவை வழங்கும் மையங்கள் பல இவ்விடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

பண்டிகைக் காலம் ஆரம்பித்ததிலிருந்து தொலைந்துபோனோர் சுமார் நாற்பதாயிரம் பேரை இம்மையத்தார் உறவினர்களிடம் தேடிச் சேர்த்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கும்ப மேளா
» கும்ப மேளா: ஜன நெரிசலுக்கு பொறுப்பேற்று அதிகாரி பதவி விலகல்
» சக்ராஸ்னானம் – திருப்பதியில் பக்தர்கள் புனித நீராடினர்
»  பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ
» அஷ்டமத்து சனி துவங்குவதால் கும்ப ராசி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum