தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்கள் மிகக் குறைவே"

Go down

தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்கள் மிகக் குறைவே" Empty தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்கள் மிகக் குறைவே"

Post  meenu Sat Mar 02, 2013 12:59 pm

இந்தியாவில் கலப்புத் திருமணங்கள், அதாவது, வெவ்வேறு
சாதிகள் இடையே நடக்கும் திருமணங்கள், ஒட்டு மொத்த திருமணங்களில் 10
சதவீதமே இருப்பதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று
தெரிவிக்கிறது.

இதை விட,வெவ்வேறு மதப்பிரிவுகளிடையே நடக்கும் கலப்புத் திருமணங்கள் 2.1 சதவீதமாக இருப்பதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

இந்தியாவில்
2005-06ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வுத் தரவுகளை
அடிப்படையாக்க் கொண்டு இந்த ஆய்வு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களால்
நட்த்தப்பட்டிருக்கிறது. இந்த தேசிய குடும்ப சுகாதார ஆய்வில், இந்தியாவில்
29 மாநிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 99,260 திருமணமான பெண்கள் குறித்த
தரவுகள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு, இந்த தேசிய
ஆய்விலிருந்து, 32160 இந்துப் பெண்கள் குறித்த தரவுகளை மட்டும் கணக்கில்
எடுத்துகொண்டு ஆய்வு செய்திருக்கிறது.

இந்த ஆய்வின்படி, இந்தியாவின் சாதிகளுக்கிடையே
நடைபெறும் திருமணங்களில், 4.97 சதவீத திருமணங்களில், பெண்கள் தங்களை விடக்
குறைந்த்தாக்க் கருதப்படும் சாதி ஆண்களையும், 4.95 சதவீத பெண்கள், தங்களை
விட மேலாக இருப்பதாக கருதப்படும் சாதிகளைச் சேர்ந்த ஆண்களையும் திருமணம்
செய்திருப்பதாகத் தெரிகிறது.





அருள்மொழி பேட்டி














'கலப்புமணங்கள் தமிழ்நாட்டில் குறைந்தது ஆச்சரியமளிக்கவில்லை'

கலப்பு மணங்கள்
தமிழ்நாட்டில் குறைந்து காணப்படுவதாக வரும் ஆய்வு முடிவுகள் தனக்கு
ஆச்சரியமளிக்கவில்லை என்று திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழி கூறுகிறார்.


கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க





பொதுவாக பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றம்
இருந்தால், சாதிக் கட்டுப்பாடுகள் பலவீனமாகும் என்று கருதப்பட்டாலும்,
சமூகப் பொருளாதாரத் தளங்களில் இந்தியாவின் பிற பகுதிகளை விட
முன்னேறியதாக்க் கருதப்படும் , தென் மாநிலங்களில் சாதிகளைக் கடந்த கலப்புத்
திருமணங்கள் 9.71 சதவீதமாகவே இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

கலப்புத் திருமணங்கள் இந்தியாவின் மேற்குப் பிராந்திய மாநிலங்களில் அதிகமாக , அதாவது 17 சதவீதமாக இருப்பதாகவும் இது கூறுகிறது.

வட இந்திய மாநிலமான பஞ்சாபில் இது 22.36 சதவீதமாக
இருப்பதாகவும். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கலப்புத்திருமணங்கள் 25
சத்வீதமாகவும் , கோவாவில் 26.67 சதவீதமாக இருப்பதாகவும் , தென்னிந்திய
மாநிலமான கேரளாவில் இது 21.35 சதவீதமாக இருப்பதாகவும் அது கூறுகிறது.

முற்போக்கு சிந்தனை இருப்பதாக் கருதப்படும் தமிழ் நாட்டில் கலப்புத் திருமணங்கள் 2.59 சதவீதமே என்று இந்த ஆய்வு கூறுகிறது.

மற்றொரு தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் கலப்புத் திருமணங்கள் 16.47 சதவீதமாக இருக்கின்றன.

இந்தியா இன்னும் பொதுவாக ஒரு பாரம்பரிய
விழுமியங்கள் உள்ள சமுதாயமாகவே இருப்பதாக்க் கூறும் இந்த ஆய்வு, சாதி என்ற
அமைப்பு இன்னும் ஒரு கடுமையான அமைப்பாகவே இருக்கிறது, திருமணம் என்ற
நிறுவனத்தை, சாதி என்பதைத் தாண்டி சிந்திக்க பெரும்பாலான இந்தியர்களால்
முடியவில்லை என்று கூறுகிறது.

ஆனால், இந்த 10 சதவீத கலப்புத் திருமணங்கள் கூட
ஒரு வித்த்தில் நல்ல ஒரு தொடக்கம் , சாதி பலவீனப்படுகிறது என்பதை இது
காட்டும் ஒரு சமிக்ஞை என்று இந்த ஆய்வு கூறுகிறது.

அருள்மொழி கருத்து


தமிழ் நாட்டில் கலப்புத் திருமணங்கள் குறைவே
என்பதாக வரும் இந்த ஆய்வு முடிவை தான் சந்தேகிக்கவில்லை என்று கூறுகிறார்
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி.

1925லிருந்து 1990 வரை, திராவிட இயக்கங்களின்
தாக்கத்தால், தமிழகத்தில் கலப்புத் திருமணங்கள் அதிக அளவில் நடந்து
வந்ததாகக் கூறும் இவர், ஆனால் திராவிடக் கொள்கையை நீர்த்துப் போகச்
செய்யுமளவுக்கு, அரசியல் கட்சிகள் சிலவும், அறிஞர்கள் சிலரும் திட்டமிட்டு
செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர். குறிப்பாக, தர்மபுரியில் காதல்
திருமணம் ஒன்று சாதிக் கலவரத்தில் முடிந்ததை சுட்டிக்காட்டிய அவர் ,
மருத்துவர் ராமதாஸ் போன்ற , திராவிட இயக்கப் பின்னணியில் வந்த அரசியல்
தலைவர்கள் , இந்த மாதிரி கலப்புத் திருமணங்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக்
குற்றம் சாட்டினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum