வலிகாமம் உயர் பாதுகாப்பு பகுதியில் நிரந்தர வேலி : மக்கள் கவலை
Page 1 of 1

யாழ் வலிகாமம் வடக்கில் ஜனவரி மாதமளவில் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினர் அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு பிரதேசத்தில் நிரந்தர எல்லைக்கான கொங்றீட் தூண் வேலியும், அதனையொட்டியதாக புதிய வீதியொன்றும் அமைக்கப்படுவதாக அந்தப் பகுதிகளைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
செப்டம்பர் மாதம் நடைபெற்ற வலிகாமம் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பலாலி விமான தளத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ள அதியுயர் இராணுவ பாதுகாப்புப் பிரதேசத்தின் ஒரு பகுதி அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியேறுவதற்காக அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த அனுமதி ஜனவரி மாதம் கிடைக்கும் என இடம்பெயர்ந்த குடும்பங்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், கடந்த மூன்று தினங்களாக அந்தப் பகுதியில் புதிய வீதியமைக்கும் பணியும், நிரந்தர வேலி அமைக்கும் பணியும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வீதி அமைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள வீடுகள் உடைக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். மீள்குடியேற்றத்திற்கென அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுவன், வீமன்காமம் போன்ற பகுதிகளில் கைவிடப்பட்டுள்ள தமது வீடுகள், காணிகளைத் துப்பரவு செய்வதற்காகச் சென்ற மக்கள், மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத பகுதியில் அதன் எல்லையில் இராணுவத்தினர் வீதி மற்றும் நிரந்தர வேலி அமைப்பதையும் அந்த இடங்களில் இருந்த வீடுகள் உடைக்கப்படுவதையும் நேரில் கண்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
சிலர் தமது வீடுகள் உடைப்பதை ஆட்சேபித்து அவற்றை உடைக்க வேண்டாம் என்று இராணுவத்தினரிடம் கோரிய போதிலும், மேலிடத்து உத்தரவுக்கமைவாகவே தாங்கள் இதனைச் செய்வதாக அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
அத்துடன் குறிபபிட்ட சில இடங்களில் முன்னர் இருந்த இராணுவ உயர்பாதுகாப்பு பிரதேசத்திற்கான எல்லை 150 மீற்றர் தூரம் முன்னால் நகர்த்தப்பட்டிருப்பதாகவும் சுகிர்தன் தெரிவித்திருக்கின்றார்.
இந்த விடயம் குறித்து பிரதேச செயலாளர், யாழ் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு முறையிட்டும் எதுவம் நடக்காததையடுத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோரிடம் தாங்கள் முறையிட்டிருந்த போதிலும் எல்லைகளை நிரந்தரமாணிக்கும் பணியும், பொதுமக்களின் வீடுகளை உடைப்பதுவும் நிறுத்தப்படவில்லை என்று வலி வடக்கு பிரதேச தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோருக்கும் இதுபற்றி முறையிடப்பட்டிருக்கின்றது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» "தாலி" பெண்ணுக்கு வேலி
» திருநெல்வேலி!-ஜன., 21 – நெல்லுக்கு வேலி கட்டிய விழா
» காற்றுக்கென்ன வேலி
» காற்றுக்கென்ன வேலி
» வீட்டிற்கு வேலி போடலாம்ன்னு இருக்கீங்களா? இதை படிச்சுட்டு போடுங்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum