தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீன் பிடி நடைமுறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'

Go down

மீன் பிடி நடைமுறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' Empty மீன் பிடி நடைமுறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'

Post  meenu Sat Mar 02, 2013 12:17 pm

இலங்கையின் மீன்பிடி தொழிலில் உள்ளுரிலும் எல்லை கடந்த நிலையிலும் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள மீன்பிடி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது பற்றி கருத்து வெளியிட்ட கடற்தொழில் திணைக்களப் பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி இந்த விடயத்தில் புதிய விதிகளைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் சட்டமாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார்.

''மீன்பிடி தொழிலில் குறிப்பாக தங்கூசி, சுருக்கு வலைகள், லைலா வலைகள் என்பவற்றைப் பயன்படுத்தக் கூடாது. வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிப்பது, கரையோரங்களில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது போன்ற முறைகள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதனால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன. மீன் இனங்கள் அழிகின்றன. இதனால், இவற்றைக் கைக்கொள்கின்ற மீனவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது'' என்றார் நிமால் ஹெட்டியாராச்சி.

''அத்துடன், இலங்கை மீனவர்கள் தங்களிடம் உள்ள 3800 வரையிலான இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி, இலங்கையின் எல்லையைக் கடந்து சென்று, இந்திய மாலைதீவு கடற் பிரதேசங்களில் மீன்பிடிக்கின்றார்கள். அவ்வாறு செல்வதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. இதனால் பலர் அங்கு வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதனைத் தடை செய்வதற்கும் சட்டங்கள் கொண்டு வரப்படவிருக்கின்றன.'' என்றார் நிமால் ஹெட்டியாராச்சி.

அதேநேரத்தில் தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதிக்குச் சென்று மீன்பிடிப்பதன் மூலம் அந்தப் பகுதி வளம் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூற முடியாது என்றும், அந்தந்தப் பிரதேசத்து மீனவர் அமைப்புக்கள் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

உள்ளுர் மீனவர்கள் எல்லை தாண்டுவதைத் தடுக்க முற்படுகின்ற அதேவேளை, எல்லை தாண்டி இலங்கைக்குள் வருகின்ற இந்திய மீனவர்களின் விவகாரம் இரு நாடுகளுக்கிடையில் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால், உள்ளுர் மீனவர்களுக்கான சட்டங்கள் அதனைத் தடுக்க முடியாது என்கிறார் கடற் தொழில் திணைக்களப் பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி.

இந்திய மீனவர்களின் வருகையானது, இலங்கை இந்திய நாடுகளின் அந்நியோன்னிய உறவுகள், அரசியல் ரீதியான தொடர்புகள் என்பவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றது. அது இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதற்கு அந்த மட்டத்திலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.

அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள இந்தப் புதிய நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்ட வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் சின்னையா தவரட்னம், உள்ளுரில் தடை செய்யப்பட்டுள்ள தொழில் முறைகளைக் கையாள்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தாங்கள் வரவேற்பதாகக் கூறினார். அதேநேரத்தில் வடபகுதி மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகின்றார்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பகுதியில், அங்குள்ள மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள். இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு மேற்கொண்டுள்ள கண்டன நடைபவனி நாச்சிக்குடாவைச் சென்றடைந்தபோதே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருக்கின்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மீன் பிடி நடைமுறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'
» உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்
» வண்ண மீன் வளர்க்கறீங்களா?: மீன் தொட்டியை அலங்கரிப்பது அவசியம்!
»  மூணு பிடி மண் எடுத்து.....
» குர்ஆனை இழிந்துரைத்த பொதுபல சேனா, ராவண பலய முக்கிய உறுப்பினர்கள் நால்வருக்கெதிராக சட்டநடிக்கை எடுக்கப்படும்! - அஸாத் ஸாலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum