தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரயில்களில் இருந்து யானைகளை பாதுகாக்க முயற்சி

Go down

ரயில்களில் இருந்து யானைகளை பாதுகாக்க முயற்சி Empty ரயில்களில் இருந்து யானைகளை பாதுகாக்க முயற்சி

Post  meenu Sat Mar 02, 2013 12:08 pm

யானைகள் ரயில் பாதைகளை கடக்கும் போது அவை ஒடும் ரயில்களில் அடிபட்டு சாகும் சம்பவங்கள் இலங்கையில் அடிக்கடி நடக்கின்றன. இச் சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில் ரயில் என்ஜின்களில் இரவில் பார்க்கும் கேமராக்களை பொறுத்தும் திட்டத்தை இலங்கை அரசு துவக்கியுள்ளது.

யானைகள் இயற்கையாக இடம்பெயர்ந்து செல்லும் தன்மை கொண்டவை. சில சமயம் அவை காடுகளைத் தாண்டி வரும் போது ரயில்களில் அடிபட்டு சாக நேரிடுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 10 யானைகள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளன. யானைகள் மீது மோதியதால் ரயில்கள் தடம்புறண்டதும், ரயில் என்ஜின்கள் சேதமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் தனியாரின் பண உதவியுடன் ரயில்வேயும் – வன இலக்காவும் இணைந்து இந்த புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதன்படி இரவில் பார்கும் திறன் கொண்ட கேமராக்கள் ரயில் என்ஜின்களில் பொறுத்தப்படும். கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் ரயிலில் முதன்முறைகாக இந்த கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் பேசிய போக்குவர்துத் துறை அமைச்சர், இந்த கேமராக்கள் வெப்ப வெளியீட்டை துல்லியமாகக் கண்டறியக் கூடியவை – ரயில் பாதையில் யானைகள் இருப்பதை பல நூறு மீட்டர்களுக்கு முன்பே காட்டக்கூடியவை என்று கூறியுள்ளார்.

ஒரு மாதம் சோதனை முறையில் இந்த கேமரா பொறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு இது வெற்றி பெற்றால் மற்ற தடங்களிலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்படும்.
இரவு நேர கேமராவில் தெரியும் யானை

இரவு நேர கேமராவில் தெரியும் யானை

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய விலங்கியல் மருத்துவர் டாக்டர் கலா சாந்தா, "எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என்று சொல்லலாம். யானைகள் அதிகம் வாழும் பகுதிகளில் – யானைகள் இருப்புப் பாதைகளை கடக்கக் கூடிய இடங்களில் ரயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும். யானைகள் மட்டுமல்லாது, மயில், மான், உடும்பு போன்ற பல விதமான விலங்குகளும் இருப்புப் பாதைகளில் அடிபட்டுச் சாகின்றன. குறிப்பாக கர்பம் தரித்த விலங்குகள் இதில் பாதிக்கப்படுகின்றன" என்றார்.

இந்தியாவிலும் ரயில்கள் மோதி யானைகள் சாவது அடிக்கடி நடக்கிறது. இது போன்ற சம்பவங்களைக் குறைக்க – யானைகள் செல்லும் வழித்தடங்களில் வனக் காவலர்களை நியமித்து யானைக் கூட்டங்களின் போக்கை கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் யானைகள் காணப்படுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டு காட்டு யானைகளின் கணக்கெடுப்பு முதல் முறையாக நடத்தப்பட்டது. அதில் நாட்டில் சுமார் 5800 யானைகள் இருப்பது தெரியவந்தது.

யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பல இடங்களில் இலங்கையில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல்கள் நடக்கின்றது. ஆண்டுதோரும் இது போன்ற மோதல்களால் பத்துக்கும் அதிகமான மனிதர்களும், இருநூறுக்கும் அதிகமான யானைகளும் கொல்லப்படுகின்றன. சமய மற்றும் கலாச்சார முறையில் மிகவும் மதிக்கப்படும் மிருகமாக யானை இருந்தாலும் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க பெண்களுக்கு நவீன உள்ளாடை
» யானைகளை மையப்படுத்தி பிரபு சாலமன் எடுக்கும் புதுபடம்!
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» முயற்சி திருவினையாக்கும்
» முயற்சி திருவினையாக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum