திக்குவாய் பிரச்னையை சரிசெய்ய வழிகள்
Page 1 of 1
திக்குவாய் பிரச்னையை சரிசெய்ய வழிகள்
பிறந்த குழந்தையில் இருந்து நம் எல்லோருக்குமே பேசுவதில் 20 சதவிகிதம் திக்குவாய் இருக்கத்தான் செய்யும். பழகப் பழகத்தான் திக்குவது நிற்கும். சில குழந்தை-களுக்கு வளர்ந்த பிறகும் திக்குவாய் இருக்கும். சாதாரணமாக, ஒரு மனிதரை நான்கு அடி அடித்தால் பேசும்போது திக்கத்தான் செய்யும். அதன் பிறகு மற்ற நேரங்களில் திக்காது. இது நோய் அல்ல. ஆனால், பிரச்னை பெரிதாகும்போது நோயாக பாவிக்கப்படுகிறது. மேலும், வலது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் இடது பக்கமும் இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் வலது பக்கமும் சுறுசுறுப்பாகச் செயல்படும். இதில் பிரச்னை இருந்தாலும் திக்கலாம். அதாவது குழந்தை பிறவியிலேயே இடது கைப் பழக்கம் இருந்து பெற்றோர் வலுக்கட்டாயமாக வலது கைப் பழக்கத்துக்கு அதை மாற்றி இருந்தால், திக்குவாய்ப் பிரச்னை வரலாம். ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ. பரிசோதனை மூலம், பேசும்போது எதனால் திக்குகிறது என்பதைக் கண்டறியலாம். இதனால் மூளையில் புரொகாஸ் பகுதியில் பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்து, அதைச் சரிசெய்யலாம். இதற்கு மூன்று விதமான பயிற்சிகள் உண்டு.
1. பேசும் பயிற்சி பாடும்போது அடிவயிற்றில் இருந்து பாடுவார்கள். ஆனால், பேசும்போது உதட்டில் இருந்து பேசுவார்கள். இதனால் பேச்சு திக்கும். இதற்கு மூச்சுப் பயிற்சி கொடுத்து நுரையீரலுக்கு காற்று செல்ல, வயிறை அசைத்து மூச்சுவிடச் செய்வது.
2. எதிரொலி பேசும் பயிற்சி: நாம் பேசுவதை நாமே கேட்டு ரசித்துப் பேசும் பயிற்சி. இதனால் தன்னம்பிக்கை பிறக்கும்.
3. பன்முக மருத்துவப் பரிமாணம்: நாம் பேசும்போது நம்மைப் போலவே ஓர் உருவத்தை உருவாக்கிப் பேசுதல்... எதிராளி இருப்பதுபோல்... இதனால் வலதுப் பக்க மூளை நன்றாக வேலை செய்யத் தொடங்கும்.
இந்த மூன்று சிகிச்சைகளுடன் அடிப்படைப் பயிற்சிகளையும் செய்துவந்தால், திக்குவாய்ப் பிரச்னை திரும்பிக்கூட பார்க்காது. தாழ்வு மனப்பான்மையும் விலகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கருப்பை பிரச்னையை தடுக்கும் டயட்
» திக்குவாய் மன ரீதியான பிரச்சனை அதை தீர்க்க வழியுண்டு!
» தற்காப்புக்கு சில வழிகள்
» கர்ப்பத்தின் போது ஏற்படும் மறதியை சரிசெய்ய...
» குதிகால் வெடிப்பு பிரச்சினையா? வீட்டிலேயே சரிசெய்ய இலகுவழி
» திக்குவாய் மன ரீதியான பிரச்சனை அதை தீர்க்க வழியுண்டு!
» தற்காப்புக்கு சில வழிகள்
» கர்ப்பத்தின் போது ஏற்படும் மறதியை சரிசெய்ய...
» குதிகால் வெடிப்பு பிரச்சினையா? வீட்டிலேயே சரிசெய்ய இலகுவழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum