இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!
Page 1 of 1
இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!
மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன.
பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இவற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !!
சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். · வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள்.
இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. · இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.
சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். · மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!
» பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்
» பிளம்ஸ் பழத்தின் மருத்துவக் குணங்கள்
» உலர் திராட்சையின் (பிளம்ஸ்) மருத்துவக் குணங்கள்.
» சர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த பழங்கள்
» பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்
» பிளம்ஸ் பழத்தின் மருத்துவக் குணங்கள்
» உலர் திராட்சையின் (பிளம்ஸ்) மருத்துவக் குணங்கள்.
» சர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த பழங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum