பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட பாலச்சந்திரன்'
Page 1 of 1
பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட பாலச்சந்திரன்'
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் இலங்கை போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கை படையினரால் பிடித்து வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதற்கு தமக்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக சானல் 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவரான காலம் மக்கரே சில ஊடகங்களின் மூலம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்னரும், பின்னரும் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு படங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
தமது நிபுணர்களின் ஆய்வுகளின்படி இந்த இரு படங்களும் ஒரே கமெராவில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு படத்தில் அந்தச் சிறுவனை சுற்றி அவனது மெய்ப்பாதுகாவலர்கள் என்று நம்பப்படும் 5 பேர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுடப்பட்டுக் கிடப்பதும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படங்களின் மூலம், அந்தச் சிறுவன் மோதலில் இடையில் அகப்பட்டு இறக்கவில்லை என்பதும், அவன் பிடிக்கப்பட்டு, அதன் பின்னரே சுடுக்கொல்லப்பட்டுள்ளான் என்பது தெரியவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகைப்படங்கள், தன்னுடைய கொலைக்களம் என்ற ஆவணப்பட தொடரில் அடுத்து வரவிருக்கும் ''பாதுகாப்பு வலயம்'' என்னும் ஆவணப்படத்தில் இடம்பெற இருப்பதாகவும் கலம் மக்கரே கூறியுள்ளார்.
இந்தப் புதிய படங்கள் போர்க்குற்றங்கள் குறித்து மேலும் கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கத்தை பதிலளிக்கும் நிலைக்கு உள்ளாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப்பட ஆதாரங்கள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வரவிருக்கும் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் இந்துப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்திருக்கின்றது.
சாக்கு மூடைகளுக்கு இடையிலும், பின்னர் சடலமாக நிலத்திலும் பாலச்சந்திரன் இருக்கும் காட்சியில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!
» தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள டிப்ஸ்.
» மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?
» குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?
» பிடித்து வைத்தால் பிள்ளையார்
» தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள டிப்ஸ்.
» மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?
» குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?
» பிடித்து வைத்தால் பிள்ளையார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum