தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெப்பம் நல்லது

Go down

 வெப்பம் நல்லது                                    Empty வெப்பம் நல்லது

Post  ishwarya Fri Mar 01, 2013 1:32 pm

உடம்பில் உயிர் நிலைத்திருக்க இன்றியமையாதவையாக இருப்பவை நீரும், நெருப்பும். இவை இரண்டும் இல்லையென்றால், உடம்பில் உயிர்

தங்காது. உடம்பு பிணமாகிப் போகும்.
உடம்பில் நெருப்பு என்று குறிப்பிடுவது, சூடாகும். சூடு இல்லாமல் போனால், ரத்தம் உறைந்துவிடும். பனிமலைகளில் ஆடையோ தகுந்த

பாதுகாப்போ இல்லாமற் போனால், ரத்தம் உறைந்து இறக்க நேரிடும். ஆகவே, உடம்பிலுள்ள சூடு, உடலெங்கும் பரவியிருக்குமாறு

பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடம்பில் சூடு இல்லாத இடமோ, அல்லது உறுப்புகளோ இல்லை. உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் சூடு பரவி நிறைந்துள்ளது. அதனால்,

அவை இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
உடம்பை இயக்குவதற்குச் சூடு தேவைப்படுவதைப்போல், உடம்பிலுள்ள அசுத்தங்களையும், அழுக்கங்களையும் நீக்கவும் அழிவுக்கவும் சூடு

தேவைப்படுகிறது.
சூடு, உடம்பிலுள்ள நச்சுப் பொருள்களை எரிக்கும்போது ஏற்படுகின்ற வெப்பத்தையே ஜுரம் என்று காய்ச்சல் என்று கூறுகிறோம்.
உடம்பில் உச்சுப்பொருள்கள் அதிகமாக இருந்தால் காய்ச்சலும் அதிகமாக இருக்கும்.
காய்ச்சல் வருவது உடல் நலத்துக்காகவே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நன்றாகக் காய்ச்சல் வந்தால், உடம்பிலுள்ள நச்சுப்பொருள்கள்

முற்றிலும் அழிந்துபோகும்.
உடம்பில் ஏற்படுகின்ற சூடு அதிகமாகாமலும் குறைந்து போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். சூடு மிகுதியானால் உள்ளுறுப்புகள்

சீர்குலைந்து போகும். அதனால், வெப்பமான இடங்களில் பணியாற்றுவதும், வெப்பமான நேரத்தில் வெளியில் செல்வதும் கூடாது. அப்படிச் செல்ல

நேர்ந்தால் மூளையில் பித்தம் ஏறி மயக்கம் வரும்.
ரத்தக் கொதிப்புண்டாகி இறக்க நேரிடும். வெயிலில் வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறபோது, தலைக்கும் உடம்புக்கும்

பாதுகாப்பைத் தருகின்ற ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.
வெயிலில் செல்லும்போது கறுப்பு நிறத்திலான குடையையோ துணியையோ போர்த்திக் கொண்டு செல்லக் கூடாது. ஏனென்றால், கறுப்பு நிறம்

வெயிலின் வெப்பத்தை இழுத்து உடம்பில் செலுத்தும் தன்மை கொண்டது. வெண்மை வெப்பத்தைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதால்,

கோடைக்காலத்தில் வெண்ணிற ஆடைகளை அணிந்தால் வெப்பத்தின் பாதிப்பிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
விலங்குகளும் பறைவகளும் வெயில், மழை, குளிர் போன்றவற்றினால் பாதிக்கப்படாமலிருக்கின்றன என்றால், அவற்றின் உடலமைப்பு, அவ்வாறு

அமைந்துள்ள. ஆனால், மனிதர்களின் உடம்பு மென்மையானது வெப்பமோ, குளிரோ சிறிதளவே இருந்தாலும் பாதிக்கப்படக்கூடியது.
மனித உடம்பின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்றவாறு, பருத்தி, கம்பளி, தோலாடை போன்றவற்றை அணிந்து, பாதுகாத்துக் கொள்ள

வேண்டும்.
சூரியக் குளியல்
இயற்கை வாழ்வுக்குத் தடையாக இருப்பவை நச்சுப்பொருள்கள். நச்சுப்பொருட்களை அகற்றிக் கொண்டே இருந்தால், உடலுக்கு நல்லது. உடல்

நலமாக இருந்தால் வாக்கும் மனமும் நலமாக இருக்கும்.
வாக்கு, மனம், காயம் ஆகிய மூன்று தூய்மையாக இருக்க வேண்டுமானால், நச்சுப்பொருள்கள் உடம்பில் தேங்கிவிடாதவாறு பார்த்துக்கொள்ள

வேண்டும்.
வாக்கு, மனம், காயம் ஆகிய இம்மூன்றுக்கும் ஒவ்வாத நச்சுப்பொருள்களை அகற்றிக் கொண்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம்.
புறத்தூய்மைக்கு அதாவது, உடல் தூய்மைக்கு நீர் அமைவது போல், சூரிய ஒளியும் புறத்தை, உடலைத் தூய்மை செய்கிறது. சூரிய ஒளி,

நச்சுப்பொருள்களை அகற்றவும் அழிக்கவும் பயன்படுகிறது.
மாலை வேளையில் வெற்றுடம்புடன் சூரிய ஒளியில் அமர்ந்துகொண்டிருந்தால், உடம்பின் மேற்பகுதியில் படிந்துள்ள நச்சுப்பொருள்கள்

அழிந்துவிடும்.
தோலின் உட்புறத்தில் படிந்துள்ள நச்சுப்பொருள்கள், தோல் நோய்களை உருவாக்குகின்றன. சொறி, சிரங்கு, படை, கட்டி, குட்டம் போன்றவை

தோலில் வரக்கூடிய நோய்கள்.
தோலில் நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், சூரியக் குளியல் அவசியம் தேவைப்படுகிறது.
உடலில் சேர்ந்துள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்ற உடல் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தான், மலர், சிறுநீர், தும்மல், கண்ணீர், வியர்வை

ஆகியவை. நச்சுப் பொருள்களை வெளியேற்ற உடல் தயாராகும்போது, அதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். உடலின்

தன்மைக்கு ஏற்றவாறு இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
குளியலும், சூரியக்குளியலும் ஒருவகையான மருத்துவ முறையேயாகும். மருத்துவ முறையை முறையாகத் தெரிந்து செய்தால் நோய் அகலும்.

நோய் வராமலும் தடுக்கலாம்.
சூரியக் குளியலும் வாழையிலைக் குளியலும் ஒன்றேயாகும்.
சூரியக் குளியலை, கோடைக் காலத்தில் செய்யக்கூடாது. கடுமையான வெயில் அடிக்கும்போது செய்தால், அதிகப் பலன் விரைவாகக் கிடைக்கும்.
குளியல் முறை:
குளியலுக்கு, வெட்ட வெளி அல்லது வீட்டின் மேல் தளம், சிமெண்ட் பூசிய தரை, கல் தரை, பாறை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
கனமான படுக்கை விரிப்பைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, தரையிலுள்ள சூடு தணியும் அளவுக்கு ஈரத்துடன் விரித்துக்கொள்ள வேண்டும்.
தரை விரிப்பில் ஒரு நபர் படுத்து போர்த்திக் கொள்ளும் அளவுக்கு நீளமாகவும் அகலமாகவும் உள்ள வாழை இலைகளை விரிக்க வேண்டும்.
சூரியக்குளியலுக்குத் தயாராகும் நபர், நன்னீரில் குளித்து விட்டு, உடலை நன்றாகத் துடைத்துக் கொண்டு, இடுப்பில் உள்ளாடை மட்டும்

அணிந்திருக்குமாறு செய்ய வேண்டும். தலைக்கு ஒரு துண்டினால் முண்டாசு கட்டிவிட வேண்டும்.
வாழை இலையில் படுப்பதற்கு முன், அரை லிட்டர் அளவுக்கு நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து, குளியலுக்குத்

தயாரானவுடன், வாழையிலையில் படுக்க வைக்க வேண்டும். காலும் கையும் உடலோடு ஒட்டி இருக்க வேண்டும்.
அவரின் கால் முதல் தலைவரை, விரிப்பில் விரிக்கப்பட்டிருக்கும் வாழையிலையால் போர்த்தி, வாழையில் பண்டு கட்டுவதுபோல் சுற்றி

கட்டிவிட வேண்டும். கட்டப்பட்டவர், மூச்சு விடுவதற்கு ஏற்றவாறு மூக்குக்கு நேராக ஒரு துளையிடுவதுபோல் இலையைக் கிள்ளி

எடுத்துவிடவும்.
வாழையிலையில் கட்டப்பட்டு, வெயிலில் கிடத்தப்பட்டிருக்கும் நபருக்கு அருகில் ஒருவர் இருக்க வேண்டும். அவரிடமிருந்து ஏதாவது தகவல்

வருகிறதா என்று கவனித்துக் கொண்டிருக்கு வேண்டும்.
சூரியக் குளியலில் இருப்பவர் போதும் என்று சொன்னால், உடனே கட்டுகளை அவிழ்த்து, இலையைப் பிரித்துவிட வேண்டும்.
அவ்வாறு கூறாவிட்டால், அதிக அளவாக, அரை மணி நேரம் மட்டும், வெயிலில் வைத்திருக்கலாம்.
கட்டுகளை அவிழ்த்துப் பார்த்தால், வாழையிலை ஒரு ஓடை போலவும், ஓடை நீரில் ஒருவர் படுத்திருப்பது போலவும் தோன்றும். அவர்

வியர்வை நீரில் படுத்திப்பார்.
இலைக்கட்டு பிரித்தவுடன் எழுந்திருக்காமல் ஒரு பத்து நிமிடம் அப்படியே படுத்திக்கச் செய்யவும். பிறகு, மெல்ல எழுந்து, ஒரு பத்து நிமிட

நேரத்துக்குப் பிறகு நன்னீரில் குளிக்க வேண்டும்.
அப்போது, குளித்த நபரின் உடம்பு லேசாக இருக்கும். தோலின் நிறம் பளபளப்பு உடையதாகவும் இருக்கும். தோலின் உட்புறத்தில் படிந்துள்ள

நச்சுப்பொருள்கள் வெளியேறியிருக்கும்.
இக்குளியலினால், தோல் நோய்கள் நீங்குவதுடன், உடல் பருமனும் எடையும் குறைகிறது.
நோய் உள்ளவர்கள், வாரந்தோறும் சூரியக்குளியல் போடலாம். சாதாரணமானவர்கள் மாதந்தோறும் செய்யலாம்.
இக்குளியல் முறையை மேற்கொள்பவர்கள், பால், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை நீக்கிவிட வேண்டும்.
சூரியக்குளியல் அனைவர்க்கும் ஏற்றதில்லை. சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம், கர்ப்பிணிப் பெண்கள், 12 வயதுக்கு உட்பட்ட ஆண்,

பெண், முதியோர் போன்றவர்களுக்கு இது உகந்ததல்ல.
சூரியக்குளியல் போலவே, ஆவிக்குளியல், புகைக்குளியல், மண்குளியல், புதைகுழிக்குளியல் ஆகியவை, நச்சுப்பொருள்களை வெளியேற்றக்

கூடியவை. அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் நேரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ற முறையைத் தேர்வு செய்து கொண்டு வந்தால், தோல் நோயும்

நச்சுப் பொருளும் அகலும். நல்வாழ்வுக்குள் செல்லும் பாதை தெரியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum