தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீரகம் சீரகம் சீரகம் சீரகம்

Go down

சீரகம் சீரகம் சீரகம் சீரகம் Empty சீரகம் சீரகம் சீரகம் சீரகம்

Post  meenu Fri Mar 01, 2013 1:19 pm

உணவும் சீரகமும் ஒன்றுடன் ஒன்று, உறவு கொண்டவை. சீரகம் இல்லாமல் உணவில்லை. சீரகச் செடி 35 – 45 செ.மீ. உயரம் வளரும் சிறு செடி. இதன் தண்டு பல கிளைகளுடன் கூடியதாகவும், இலைகள் நீட்டமாக, நன்கு பிரிந்து பச்சையாகவும் (கொத்துமல்லி இலையைப் போல்) இருக்கும்.
செடியின் உருண்டையான பகுதிகளில் வெண்ணிறமுள்ள சிறு மலர்கள் தோன்றும். பூத்ததும் இந்த உருண்டையான முடிச்சுகள் பிளந்து அவற்றில் மூன்று அங்குலம் நீளமான பழங்கள் தோன்றும். அவற்றில் விதைகள் மிகுந்திருக்கும். கோள வடிவில் 6 மி.மீ நீளமாக மஞ்சள் – பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த விதைகள் தான் சீரகம். நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
பழைய காலங்களிலிருந்தே உபயோகத்தில் இருக்கும் சீரகம், எகிப்து, சிரியா, துருக்கி, மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியது. இப்போது வட ஆப்ரிக்கா, இந்தியா, சீனா தேசங்களில் பயிரிடப்படுகிறது.
100 கிராம் சீரகத்தில் ஈரப்பசை 6.2%, புரதமும் 17.7%, கொழுப்பு 23.8%, நார்ச்சத்து 9.1%, மாவுப்பொருள் 35.5%, தாதுப்பொருட்கள் 7.7 உள்ளன. தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தியாமைன், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின்கள் சி, ஏ, இவைகளும் உள்ளன. கலோரிகள் 460 காய வைத்த சீரகப் பழத்திலிருந்து டிஸ்டிலேசன் என்ற முறைப்படி, நறுமணமுள்ள, காற்றில் ஆவியாகக்கூடியதும், இலேசானதும் மஞ்சள் நிறம் கொண்டதுமான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணெயில் குமிக் அல்கலாயிட் 52% உள்ளது.
பலவகை ரசாயன பொருட்கள் கலந்துள்ள இவ்வெண்ணெயைக் கொண்டு செயற்கை தைமோல் செய்யப்படுகிறது. மற்றும் சீரகத்தில் 10% சீரக எண்ணெயும், பென்டோசன்6.7% உள்ளன.
தைமோலின் பயன்கள்
தைமோலின் வயிற்றுப்பூச்சிகளை கொல்லவல்லது. செப்டிக் மருந்தாகும். சீழையும், கிருமியையும் போக்கவல்லது. அதுவும் கொக்கிப்புழுக்களை ஒழிக்கும். வாய்வு உப்புசத்தை போக்கும். சிறுநீர் பிரிய உதவும்.
ஜீரணத்திற்கு
சீரகம் பல வகைகளில் ஜீரணத்திற்கு உதவும். அஜீரணம், பித்தம், பேதி இவற்றைப் போக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து. இத்துடன் கொத்தமல்லி சாறையும் (ஒரு தேக்கரண்டி) சிறிது உப்பு சேர்த்து குடிக்க வயிற்று கோளாறுகள் குறையும் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கால் ஸ்பூன் சீரகத்தைத் தூள் செய்து கலந்த நீரை பருகினால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம்.
இது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் போல் பாதுகாப்பானது. வயிற்று வலிக்கு 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் வெந்தயம் தூள் செய்து மோரில் கலந்து குடிப்பது வழக்கம்.
தூக்கமின்மை
வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் சீரகப் பொடியுடன் இரவில் சாப்பிட தூக்கம் வரும்.
ஜலதோஷம்
மேற்சொன்னபடி, சீரகத்தண்ணீர் குடித்து வந்தால், ஜலதோஷம், அதன் கூட வரும் ஜூரமும் குறையும். தொண்டை கட்டிவிட்டால் சீரகத் தண்ணீருடன் இஞ்சி கலந்து பருக தொண்டை எரிச்சல் குறையும்.
விஷமுறிவு
தேற்கடித்தால் வெங்காய சாறுடன் அரைத்த சீரகம் கலந்து உணவை, தேள் கடித்த இடத்தில் தடவ வலிக் குறையும்.
கருஞ்சீரகம்
சீரகத்தின் ஒரு வகையான கருஞ்சீரகமும் மூலவியாதி, ஞாபக மறதி போன்றவற்றுக்கு நல்லது. சீரகத்தைப் போலவே பயன்படும்.
இதர பயன்கள்
குளிர்காய்ச்சல், காமாலை, வாய்நாற்றம், வாயில் எச்சில் ஊறுவது, பெண்களின் சூதகத்தை கோளாறுகள், இவற்றுக்கு மருந்தாக சீரகம் உதவும்.
தவிர உணவுகளுக்கு சுவை கூட்டவும், மணமளிக்கவும் பயன்படுகிறது. வாசனை பொருட்கள் தயாரிப்பில் சீரக எண்ணெய் பயன்படுகிறது.
சீரக சூப்
தேவை

துவரம் பருப்பு-1/2கப்
எலுமிச்சம் சாறு-1/2மூடி
மிளகாய் வற்றல்-2
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-1/4டீஸ்பூன்
நெய்-1டீஸ்பூன்
கொத்தமல்லி -சிறிது

செய்முறை
துவரம் பருப்பை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசிக்க வேண்டும். பிறகு மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். பின்பு சீரகம், மிளகு இரண்டையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்து பொடி செய்து சூப்பில் போட வேண்டும். நுரை நன்கு பொங்கி வந்ததும் எலுமிச்சம் சாறு சேர்க்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum