தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாசனையால் கேச வளர்ச்சி

Go down

வாசனையால் கேச வளர்ச்சி Empty வாசனையால் கேச வளர்ச்சி

Post  meenu Fri Mar 01, 2013 12:52 pm

அழகு சாதன நிபுணரான ரெனெ மாரிஸ் கட்டேஃபோஸா ஒரு நாள் தன் கையை சுட்டுக் கொண்டுவிட்டார். வலியும், எரிச்சலும் தாங்காமல், பக்கத்திலிருந்த லாவண்டர் எண்ணை பாத்திரத்தில் கையை விட்டார். வலியும் வேதனையும் குறைந்தது. 2 நாட்களில் தழும்பு, வடு ஏதுமின்றி கை குணமானது. இது தான் இன்று வாசனை சிகிச்சை எனப்படும் (அரோமாதெரபி) ன் ஆரம்பம்.
அரோமா சிகிச்சை பூக்கள், மூலிகைகள் போன்றவற்றால் தயாரான முக்கிய எண்ணைகளில் இருக்கும். நறுமணத்தால் செய்யப்படும் ஒரு சிகிச்சை. இந்த சிகிச்சைக்கான எண்ணை, மூலிகைகளின் இலைகள், மொட்டுக்கள், பூக்கள், மரப்பட்டை, வேர்கள், விதைகள் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. 1300 வகை தாவர எண்ணைகள் உலகெங்கும் அரோமா சிகிச்சையில் பயன்படுகின்றன. இவற்றில் 300 வகை வாசனை எண்ணைகள் விசேஷமானவை. இந்தியாவில் 10 வகை எண்ணைகளை இறக்குமதி செய்கிறோம்.
அரோமா சிகிச்சையின் நன்மைகள்
அரோமாதெரபியில் உபயோகப்படுத்தப்படும் முக்கிய எண்ணைகன், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சனம் போன்ற கிருமிகளுக்கு எதிரி.
உடல் நாற்றத்தை போக்கி நறுமணத்தை உண்டாக்கும்.
உடல் வீக்கம், வலிகளை குறைக்கும்.
மனஅமைதியை உண்டாக்கும். உள்மருந்தாக கொடுக்கப்படுவதில்லை.
மனோரீதியான கோளாறுகளுக்கு அரோமா சிகிச்சை நல்ல பயனளிக்கும்.
மெனோபாஸினால் வரும் மனக்கோளாறுகளை தடுக்கும்.
மற்ற எல்லா வயதினரும், குழந்தையிலிருந்து முதியோர் வரை உபயோகிக்கலாம்.
கூந்தல் முடி இவைகளின் அனைத்து குறைபாடுகளையும், முக்கிய எண்ணைகளால் களைய முடியும்.
அரோமா சிகிச்சையின் முக்கிய எண்ணைகள், முடிக்கு பலம்
தரவும், பொடுகை நீக்கவும், அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கவும், பயன்படுகிறது. மற்ற எண்ணைகளுடன் கலந்து உபயோகித்தால் சிறந்த பலனை தரும். எளிதில் ஆவியாகும் முக்கிய எண்ணைகளுடன், சில அடிப்படை எண்ணைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல அடிப்படை எண்ணைகள் – நல்லெண்ணை, கடுகெண்ணை, ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணை, கோதுமை எண்ணை, தானிய எண்ணைகள், தேங்காய் எண்ணை, சூரிய காந்தி எண்ணை போன்றவை. 10 மி.லி. சேர்ப்பது சரியானவை.
முடி கண்டீஷனர்கள்
சாதாரண கூந்தலுக்கு – ஜெரானியம், லாவண்டர், ரோஸ்மேரி
வறண்ட கூந்தலுக்கு – ஜெரேனியம், ரோஸ்மேரி, சந்தனம்
எண்ணை செறிந்த கூந்தலுக்கு – சைப்ரஸ், ஜெரேனியம், ஜுனிபர் பெர்ரி, எலுமிச்சம் பழம், ரோஸ்மேரி
மண்டை தோல் கண்டீஷனர்கள்
பொடுகுக்கு – லெமன் கிராஸ், சிடார்வுட் எண்ணை, பெர்காமோட், ரோஸ் மேரி, பீ ட்ரி எண்ணை 10 மி.லி. அடிப்படை எண்ணை, உதாரணமாக நல்லெண்ணையும், மேற்கண்டவற்றில் ஒவ்வொன்றிலும் 6 துளிகள் கலந்து உபயோகிக்கலாம்.
அரிப்புள்ள மண்டை தோலுக்கு – லாவண்டர், யார்ரோ, சாமோமில்
அரோமதெரபிக்கேற்ற அடிப்படை, முக்கிய எண்ணைகளை கலக்கும் விகிதம் – 10 மி.லி. அடிப்படை எண்ணையுடன் 6 துளிகள் 2 அல்லது 4 முக்கிய எண்ணைகளை சேர்க்கலாம். எண்ணைகளை தடவும் இடங்களில் 5 நிமிடமாவது ஊறவைக்க வேண்டும்.
முடி உதிர்தலை தவிர்க்க
முக்கிய எண்ணைகள் – செடார்வுட், ஜோஜோபா ஆயில், லாவண்டர், எலுமிச்சை, ரோஸ்மேரி, ரோமன் சாமோமில் இவற்றுடன் ஒரு அடிப்படை எண்ணையை சேர்த்து உபயோகிக்கவும்.

முடி செழித்து வளர
தைம் முக்கிய எண்ணை – 2 துளி
செடார்வுட் எண்ணை – 2 துளி
லாவண்டர் முக்கிய எண்ணை – 3 துளி
ரோஸ் மேரி முக்கிய எண்ணை – 3 துளி
ஜோஜோபா எண்ணை – 1/2 தேக்கரண்டி
கிரேப் விதை எண்ணை – 4 தேக்கரண்டி

முதல் நான்கை நன்கு கலந்த பின், மற்ற இரண்டையும் சேர்த்துக்
கொள்ளவும். தினமும் இரவில் 2 நிமிடங்கள் இந்த கலவையை தலையில் தேய்த்து சூடான துவாலையால் தலையை மூடிக்கொள்ளவும்.
ஜீவனில்லாத முடியை உயிர்ப்பித்தல்
10 மி.லி. ஜோஜோபா எண்ணை, ஜெரேனியம், பச்சோலி, சந்தன தைலங்கள் ஒவ்வொன்றும் ஒருதுளி சேர்த்து கலக்கவும். இந்த எண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக கைகளில் தேய்த்து தலையில் மசாஜ் செய்யவும். 5 நிமிட மசாஜிற்கு பிறகு, துவாலையால் தலையை மூடி, 20 நிமிடம் இருக்கவும். பிறகு தலையை அலசவும். வாரம் ஒரு முறை செய்து வர, உங்கள் முடி பளபளக்கும்.
எச்சரிக்கை
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரோஸ்மேரி எண்ணையை பயன்படுத்தக் கூடாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum