கோடையில் சர்ம பாதுகாப்பு
Page 1 of 1
கோடையில் சர்ம பாதுகாப்பு
கோடையின் தாக்கத்தை முழுமையாக உணர்வது நமது சர்மம் தான். வெய்யிலின் சூட்டாலும், புழுக்கத்தினாலும் உடலின் நீர்கள் வற்றி விடும். இதனால் தான் கோடையில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பழரசங்களை பருக வேண்டும். முகத்தில் பச்சைத் தண்ணீரை அடிக்கடி தெளித்துக் கொள்ளவும். ரோஜா பன்னீர் சேர்ந்த நீராலும் முகத்தை கழுவலாம். குளிர்ச்சியாக இருக்கும்.
கோடையில் சருமத்தை பராமரிக்க, சில டிப்ஸ்
தினமும் இருமுறையாவது குளிப்பது அவசியம். காலைக் குளியலுக்கு அடுத்த குளியல் மாலை வேளையில் செய்ய வேண்டும். மாலைக் குளியலால், நாள் முழுவதும் ஏற்பட்ட வெய்யில் தாக்கம், அசதி, அலுப்பு குறையும். மாலையில் குளிக்கு முன், உடலில் சந்தனாதி தைலம், ப்ருங்காமலாதி தைலம், த்ரிபலா தைலம், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை, இவற்றில் ஏதாவது ஒரு எண்ணையைத் தடவி குளிக்கலாம். காலையில் எண்ணை தேய்த்துக் குளித்து விட்டு, வெய்யிலில் அலைந்தால் தலைவலி வரும். மாலை எண்ணைக் குளியலால் நல்ல தூக்கம் வரும். பாலில் அரைத்த வெள்ளை மிளகு, தேங்காய் பாலில் அரைத்த சீரகம், நீரில் அரைத்த கச கசா இவற்றையும் உடலில் தேய்த்துக் கொண்டு குளிக்கலாம்.
கோடைக் காலத்திற்கேற்ற உணவுகளான இளநீர், பனநுங்கு, தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை பகல் உணவுக்கு பின் ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து உண்பது நல்லது என்று ஆயுர்வேத வைத்தியர்கள் கூறுகின்றனர். இந்த உணவுகள் கோடையில் உடலுக்கு நன்மை செய்வதால், தோலுக்கும் நன்மை பயக்கின்றன. தினமும் எலுமிச்சம் பழ சாறு அருந்தலாம்.
தினமும் நீராவி முகருவதை செய்தால் முகத்துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் 5 நிமிடமும், எண்ணை பசை மிகுந்த சரீரம் உள்ளவர்கள் 10 நிமிடமும், கொதிக்கும் நீரிலிருந்து எழும் நீராவியை நுகருவது நல்லது.
கோடையில் பயன்படுத்த சில முகத் தேய்ப்புகள்
உலர்ந்த ஆரஞ்சு தோல் + சமைத்த ஒட்ஸ் + பாதாம் பருப்பு – இவை ஒவ்வொன்றும் ஒரு கப் எடுத்து மிக்ஸியில் பொடித்து கலந்து கொள்ளவும். பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் (அ) அரைமணி கழித்து கழுவவும். இதனால் அழுக்குகள் நீங்கும்.
உலர்ந்த சருமத்திற்கேற்ற மாஸ்க் – இரண்டு தேக்கரண்டி பால் + இரண்டு மேஜைக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும். சம அளவு ரோஜா பன்னீர், கிளைசரின் எடுத்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாய்ஸ்சுரைஸர்ராக பயன்படுத்தலாம்.
எண்ணைப் பசை உள்ள சர்மத்திற்கு – ஒரு தக்காளியிலிருந்து எடுக்கப்பட்ட கூழுடன், முல்தானி மட்டி சேர்ந்து குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். முகத்தில் இந்த கலவை உலர்ந்து போகும் வரை விட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.
நார்மல் சருமத்திற்கு – மஞ்சள் பொடியை பாலில் குழைத்து தடவி, அரைமணி (அ) ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். சந்தனப் பொடி + பன்னீர் குழைத்து தடவி வரவும். கருமை திட்டுகளையும் இந்த கலவை போக்கும். இரவு முழுவதும் இந்த கலவை முகத்தில் இருக்கட்டும்.
கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம்.
வெப்பத்தால் ஏற்படும் சர்ம அழற்சி, சர்மம் வரண்டு போவது இவற்றுக்கு காரணங்கள். எண்ணை தேய்த்துக் கொள்ளாதது, மாங்காய், மாம்பழம் அதிகம் உண்பது. இவற்றாலும் சர்ம பாதிப்புகளை உண்டாக்கும். இவற்றுக்கு, ஜீரகம், ஓமம், கார்போக அரிசி இவற்றை தேங்காய் பாலில் அரைத்து உடலில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்தால் நல்லது. ஆயுர்வேத தைலங்கலான தூர்வாதி தைலம், சதுக்ஷீரிகேர தைலம் இவை நல்லது.
கோடையில் தோலில் அரிப்பும் சினப்பும் ஏற்பட்டால், முன்னிரவில் கசகசாவை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து தேய்த்து குளித்தால் அரிப்பு குறையும்.
தூர்வாதி தைலம்
ஒரு கிலோ அருகம்புல்லை இடித்து 8 லிட்டர் தண்ணீரிலிட்டு, 2 லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி கஷாயம் செய்து கொள்ளவும். தனியாக 50 கிராம் அருகம்புல்லை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். இந்த விழுதையும், ஏற்கனவே தயார் செய்த கஷாயத்தையும், ஒரு லிட்டர் தேங்காய் எண்ணையுடன் கலந்து, துணியால் மூடி, இரண்டு நாட்கள் வெய்யிலில் வைக்கவும். மூன்றாம் நாள் அடுப்பிலிட்டு தண்ணீர் நீங்கும் வரை காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
இந்த தைலம், அரிப்பு, சினைப்புகளுக்கு நல்ல மருந்து. கோடைக்கால சர்ம பாதிப்புகளை போக்க தூர்வாதி தைலம் போன்ற பல தைலங்கள் ஆயுர்வேதத்தில் கிடைக்கின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்ம ஆரோக்கியத்திற்கு விட்டமின் இ
» சர்ம பாதிப்புகள்
» கோடையில் தாக்கும் கண் நோய்கள்!
» கோடையில் எது சூடு எது குளிர்ச்சி?
» கோடையில் உடம்பை குளிர வையுங்கள்
» சர்ம பாதிப்புகள்
» கோடையில் தாக்கும் கண் நோய்கள்!
» கோடையில் எது சூடு எது குளிர்ச்சி?
» கோடையில் உடம்பை குளிர வையுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum