தயிர் வேண்டாமே மோர் குடிங்க!
Page 1 of 1
தயிர் வேண்டாமே மோர் குடிங்க!
சித்திரை மாதம் பிறந்து விட்டது; கோடை ஆரம்பித்துவிட்டது. ஆனால், கத்திரி பருவம் வருவதற்கு முன்னரே, வெயில் கொளுத்துகிறதே, இந்த கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என, புலம்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்கள்ஞ்
* கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; நுங்கு, கிர்ணிப் பழம், தர்பூசணி போன்ற பழங்கள், இளநீர், பிரஷ்ஷான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்; முடிந்த வரை குளிர்பானங்களாக குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல், காத்துக் கொள்ளலாம். தயிராக சாப்பிடாமல், அதில் நிறைய தண்ணீர் கலந்து மோராக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து, அதன் சாறு மோரில் இறங்கும் படி செய்ய வேண்டும். பின், அதில், பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது.
* தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். அப்போது தான், கோடை காலத்தில் அதிகளவு வியர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
* இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகள் அணியலாம். இதனால், கசகசவென இருக்கும் உணர்வு தவிர்க்கப்படும்; குறிப்பாக, உள்ளாடைகளும், பருத்தியாலானவற்றை அணிவது, மிகவும் நல்லது.
* உடல் சூட்டின் அளவை குறைக்க <உதவும் வைட்டமின் சி எலுமிச்சம்பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
* வெயில் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதால், ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், குடை எடுத்துச் செல்லுங்கள். இதனால், அதிகளவு சூரிய வெப்பம், உடலை தாக்குவதை தவிர்க்கலாம்.
* பகல் வேளைகளில், வீட்டில் அறைகளின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து, இயற்கையான வெளிக் காற்று வரும் வகையில் வைக்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றிற்கும், பருத்தியாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
* கோடை காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை போக்க, பாலாடை தேய்க்கலாம்.
கோடை காலத்தில், உடலின் நீர்ச்சத்து வற்றாமல் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயிர் வேண்டாமே மோர் குடிங்க!
» தாமதம் வேண்டாமே!
» குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே
» பெற்றோர்களே! குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ வேண்டாமே!!!
» வாக்குவாதம் வேண்டாமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum