தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வலிகளைத் தாண்ட வழிகள் உண்டு!

Go down

வலிகளைத் தாண்ட வழிகள் உண்டு!  Empty வலிகளைத் தாண்ட வழிகள் உண்டு!

Post  ishwarya Thu Feb 28, 2013 2:22 pm

‘வலியுடன் வாழ்க்கை’ என்பது வயோதிகத்தின் சாபக்கேடு... வயதானவர்களுக்கே உரிய மன வலிகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பாடாகப்படுத்தும் உடல் வலிகள்... சொல்லவும் முடியாத, மெல்லவும் முடியாத வாழ்க்கைப் போராட்டம் அது. மிச்ச வாழ்க்கையை வலியுடன் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என நினைக்கிற முதியவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஆறுதலும் தீர்வுகளும் சொல்கிறார் டாக்டர் குமார். வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணரான இவர், வயதான பெண்களுக்கு வரக்கூடிய பல்வேறு வலிகள், அவற்றின் அறிகுறிகள், தீர்வுகள், ஆலோசனைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.

வலி ஏன்?

வயதான பிறகு வரக்கூடிய வலிகளை,வயோதிகத்தின் அங்கமாக நினைத்து, அதை யாரிடமும் சொல்லாமல் சகித்து வாழ்கிற பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. இன்றைய நவீன மருத்துவத்திலோ எந்த வயதில் ஏற்படுகிற வலிகளுக்கும் தீர்வுகளும் சிகிச்சைகளும் உண்டு.
திசுக்கள் தேய்வது, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மாதிரியான நோய்களின் விளைவு, உணவில் சத்துக்குறைபாடு (உதாரணத்துக்கு கால்சியம்), கடைசியாக மனம் மற்றும் சூழ்நிலை தொடர்பான பிரச்னைகள் என வயதான பெண்களின் வலிகளுக்குப் பல காரணங்கள் உண்டு. இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, வயதான காலத்தில் ஆதரவுக்கு ஆட்கள் இன்றி, தனித்து விடப்படுகிற போது, சரியான பராமரிப்பு இல்லாமல், வலிகள் அதிகமாகி, அந்த அவதிகளுடனேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் ஒரு காரணம்.

வகை வகையான வலிகள்... முழங்கால், மூட்டு வலி
வயதான பெண்களைப் பாதிப்பதில் முதலிடம் முழங்கால், மூட்டு வலிக்கே!
4 பெண்களில் ஒருவருக்கு இந்த வலி இருக்கிறது. ‘ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்’ எனப்படுகிற இந்த வலிக்கு, முழங்கால், மூட்டு தேய்மானம்தான் முக்கிய காரணம். அடுத்தபடியாக முழங்காலை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பது, அதிக உடல் எடை, எந்த வேலையும் செய்யாமலும், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதாலும் மூட்டு வலி வரும். முழங்கால் மூட்டு தேய்மான வலியில் 4 நிலைகள் உள்ளன. முதல் நிலையில் முழங்கால் விரைப்பாக இருக்கும். மடக்கவோ, நீட்டவோ சிரமப்படுவார்கள். குறிப்பாக காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது!

இரண்டாவது நிலையில் முழங்காலின் உள்ளே வலிக்கும். மூன்றாவது நிலையில் முழங்கால் மிகவும் சேதமடைந்து, வீங்கும். கடைசியாக, முழங்கால் மிகவும் பாதித்து, வளைந்து காணப்படும். நடக்கவே முடியாது.

இந்த வலியில், முதல் நிலையான விரைப்புடன் வலி வரும்போதே, சிகிச்சையை ஆரம்பித்தால், எளிதில் குணப்படுத்தலாம். கடைசி நிலை வரை விட்டால், பெரும்பாலும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். மற்ற இரு நிலைகளில் வலியைத் தடுப்பதற்கு மருந்துகளும், மூட்டினுள்ளே செலுத்தக்கூடிய ஓஸோன் வாயு சிகிச்சை, ரேடியோ அலை சிகிச்சை போன்றவை உதவும்.

முதுகு வலி

வயதான பெண்களுக்கு முதல் முறை முதுகு வலி வரும்போது, அலட்சியம் கூடாது. கால்சியம் குறைபாட்டால், முதுகெலும்பு பலவீனமாகி, நொறுங்கி, வலி தீவிரமடையலாம். உடனடியாக கவனிக்காவிட்டால், நொறுங்கிய முதுகெலும்பு, தண்டுவடத்தை அழுத்தி, நிரந்தர நரம்புப்
பிரச்னைகளை உண்டுபண்ணும்.

இரண்டு முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள முதுகு சவ்வு தேய்ந்து, எலும்புகள் விலகுவதாலும், வயதான பெண்களுக்கு முதுகு வலி வரும். சாதாரண வலி மாத்திரையோ, ஓய்வோ இந்த வலிக்குத் தீர்வாகாது. மருத்துவரை அணுகி, நவீன வலி நிர்வாக சிகிச்சை முறையில், முதுகெலும்பு முறிந்தவர்களுக்கு ஒரு வகையான எலும்பு சிமென்ட்டை உள்ளே செலுத்திச் செய்யப்படுகிற ‘வெர்டெப்ரோபிளாஸ்டி’ எனப்படும் சிகிச்சை மட்டுமே பலன் தரும். கூடவே ஒவ்வொருவருக்கும் தகுந்த உடற்பயிற்சிகளை மருத்துவர் சொல்லித் தருவார். அவற்றைப் பின்பற்றினால் தொடர்ந்து வலியின்றி வாழலாம்.

இடுப்பு வலி

இடுப்பு வலி இல்லாத பெண்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மிக அதிகமானவர்களைப் பாதிக்கிறது இது. இடுப்பு எலும்பு தேய்வதாலும், முன்பு ஏற்பட்ட ஏதோ ஒரு காயத்தின் விளைவாலும், கர்ப்பப்பை இறக்கத்தினாலும், ‘வெள்ளைப்படுதல்’ போன்ற நோயினாலும் இடுப்பு வலி வரலாம். சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

கால் வலி

வயதான பெண்கள் சந்திக்கிற இன்னுமொரு பரவலான பிரச்னை கால் வலி மற்றும் கால் எரிச்சல். இதற்கு மிக முக்கிய காரணம் அதிகரித்து வருகிற நீரிழிவு. கட்டுப்பாட்டில் இல்லாத மற்றும் சரியாக கவனிக்கப்படாத நீரிழிவின் காரணத்தால், நரம்புகள் பாதித்து, கால் எரிச்சலும், வலியும் வருவது சகஜம். ‘டயபடிக் நியூரோபதி’ எனப்படுகிற இந்தப் பிரச்னைக்கு சிறப்பு மருந்துகளும் சிகிச்சைகளும் உள்ளன. நடைப்பயிற்சியும் உதவும். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே கால் வலி காணாமல் போகும்.

தவிர்க்க வேண்டியவை...
வலியைத் தருகிற வேலைகளையும் பயிற்சிகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சுய மருத்துவம் கூடாது. இளவயதினரைப் போல, வயதானவர்களுக்கு எல்லா மருந்துகளும் ஒத்துக்கொள்ளாது. சாதாரண மருந்துகளும் மாத்திரைகளுமே கூட, சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தான பக்க விளைவுகளை உருவாக்கலாம். தவிர, மருத்துவரின் அறிவுரையின்றி, தாமாக இவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள், சிறுநீரகத்தையும் கல்லீரலையும் பாதிக்கவும் கூடும்.

செய்ய வேண்டியவை...
நடைப்பயிற்சி, யோகா மாதிரியான மிதமான பயிற்சிகளைச் செய்யலாம். மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் ‘என்டார்ஃபின்’ எனப்படுகிற இயற்கையான ஹார்மோன் சுரந்து, வலியை நீக்கி, இதமளிக்கும்.
சரியான நேரத்தில், சத்தான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமைதியான குடும்பச் சூழலும், அன்பான பராமரிப்பும் கிடைக்கும் போது, வயோதிகப் பருவம், வலியில்லாத வசந்தப் பருவமாக மாறும்.

வலியும் வாழ்வும்

இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை 10 கோடி. அதில் 60 வயதைக் கடந்தவர்களில் அதிகம் பேர் பெண்கள்.வயதான பெண்களில் 66 சதவிகிதம் பேருக்கு ஏதோ ஒரு வலி இருக்கிறது. மூட்டு வலியும், நியூரால்ஜியா எனப்படுகிற நரம்பு வலியும் மிக அதிகம்.
34 சதவிகிதப் பெண்கள் தமக்கு இருப்பது நாள்பட்ட வலி என்பதே தெரியாமல், வலியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

ஃபேஸட் ஜாயின்ட் பிளாக் என்பதே 40 - 50 சதவிகித முதுகு வலிக்கான காரணங்கள். இதை வழக்கமான சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் கண்டுபிடிக்க முடியாது. முதுகெலும்பு இணைப்பில் உள்ள சந்தேகத்துக்குரிய நரம்புகளை பிளாக் செய்து, வலி குறைவது கண்டுபிடிக்கப்பட்டால், பிறகு அதற்கேற்ப சிகிச்சை தொடங்கப்படும்.

முழங்கால், மூட்டு வலிகள் இருந்தால், எக்ஸ் ரே மூலம் மூட்டு தேய்மானத்தை உறுதி செய்த பிறகு, பிரத்யேக ஊசி மூலம் ஓஸோன் வாயுவையும், ரேடியோ அலைகளையும் செலுத்தி, வலியை குணப்படுத்துவார்கள்.

நரம்பு தொடர்பான இதர வலிகளுக்கு, வலி உண்டுபண்ணும் நரம்புகளில் மருந்தைச் செலுத்தி, எக்ஸ் ரே அல்லது அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் மூலம் காரணம் கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்படும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum