இந்தியாவில் அதிகரித்திருக்கும் மறதி நோய்!
Page 1 of 1

இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய் எய்ட்ஸ் மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். அல்ஸைமர் என்னும் மறதி நோய்க்கும் இதுநாள்வரை மருந்து இல்லை. நம் இந்தியாவில் 37 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவில் இந்த நோய் பாதிப்பில் 22 சதவீதமாகும்.
1906ல் ஜெர்மானிய நரம்பியல் மருத்துவர் அலேய் அல்ஸை மர் என்பவர், தன்னிடம் வந்த 55 வயது நோயாளி ஒருவருக்கு இந்நோய் இருப்பதை முதன்முதலாகக் கண்டுபிடித்தார். அதன் பிறகு அவர் பெயராலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது.
பணத்தைக் கையாள்வதற்கு சிரமப்படுவது, திரும்பத் திரும்ப கேள்விகளைக் கேட்பது, அன்றாட வேலைகளைச் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்வது, பொருட்களைத் தொலைத்து விடுவது அல்லது இடம் மாற்றி வைப்பது, முகபாவம் மாறுவது போன்றவை இந்நோயின் முதல் நிலை அறிகுறிகள். இது 2 முதல் 4 ஆண்டுகள் நீடிக்கும்.
சமீபத்திய நிகழ்வுகளையும் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் மறந்து விடுவது, உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாதது, நன்கு பழகிய முகங்களையே மறந்துவிடு வது, பேச, படிக்க, எழுத முடியாத நிலை, அங்கும் இங்கும் திரிவது ஆகியவை இதன் இரண் டாம் நிலை அறிகுறிகள் ஆகும். இது இரண்டிலிருந்து பத்தாண்டுகள் நீடிக்கும்.
உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாதது, ஞாபகம் முழுமையாக இல்லாமை, அடிக்கடி தூங்குவது, அதன்மூலம் மற்ற நோய் களுக்கு இடம் கொடுப்பது போன்றவை மூன்றாம் நிலை. இது 2 முதல் 10 ஆண்டுகள் நீடிக்கும்.
பெருமூளைப் புறணியில் உள்ள நரம்பு செல்களையும், நரம்பு இணைப்புகளையும் இந்நோய் அழிப்பதால், மூளைத் திசுவின் எடை வெகுவாகக் குறைந்துவிடுகிறது.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி இந்நோய் தாக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் வசிக்கின்றனர். 2025ல் இது 70 சதவீதமாக உயரும் என அஞ்சப்படுகிறது.இதய நோயாளிகளுக்கும் நீரழிவு நோயாளிக்கும் இந்த நோய் தாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.
இந்தியாவில் 65 வயதுக்கு மேலானவர்களில் இருபது பேரில் ஒருவருக்கு இந்நோய் உள்ளதாகச் சொல்கிறது ஒரு புள்ளி விவரம். 85 வயதுக்கு மேலானவர்களில் ஐவரில் ஒருவர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 லட்சம் பெண்கள் இந்நோயினால் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
ஆனாலும் நம் நாட்டில் அல்ஸைமர் பற்றிய விழிப்புணர்வு மிகமிகக் குறைவாகவே உள்ளது. அல்ஸைமர் நோயாளிகளை முழு நேரம் கவனிக்க இந்தியாவில் 10 முதல் 15 மையங்களே உள்ளன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியாவில் அதிகரித்திருக்கும் மறதி நோய்!
» மறதி நோய் வராமல் தடுக்க...
» நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்
» மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்!
» ஞாபக மறதி குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum