குடல் இறக்கம் பிரச்னை வராமல் தடுக்க
Page 1 of 1
குடல் இறக்கம் பிரச்னை வராமல் தடுக்க
*குடல் இறக்கம் பிரச்னை வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார் சங்கீதா. அதிக உடல் எடை, பிரசவத்துக்குப் பின்னர் வயிறு சுருங்கும் போது, அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் போது, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடல் இறக்கம் செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தும்.
*இது குழந்தைகளுக்கும் வரலாம். அதிக கொழுப்பு உணவு, எண்ணெயில் பொரித்த உணவு மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்கு போதுமான சத்து இன்றி குடல் ஒட்டிக் கொண்டு இந்தப் பிரச்னை வரலாம். மேலும் செரிமானப் பிரச்னையுடன் வலியும் ஏற்படும். மலச்சிக்கல், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் குடல் இறக்கப் பிரச்னை வருவதற்கு முன் சரி செய்ய முடியும்.
*கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் குடல் இறக்கப் பிரச்னை உள்ளவர்கள் ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதற்கு பதிலாக குறைந்த அளவு அதிக இடைவெளிகளில் சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மசாலா மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்கவும். மாவுப் பொருட்களும் எதிரியே. இதனால் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
*நார்மல் புரோட்டின் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் சேர்க்கவும். கூடுமானவரை அசைவத்தைத் தவிர்ப்பது நல்லது. உணவுடன் சாலட் மற்றும் சூப் வகைகள் அடிக்கடி எடுத்துக் கொள்வது அவசியம். சரிவிகித உண வை கடைபிடிப்பதன் மூலம் அதிக உடல் எடை மற்றும் மலச்சிக்கலைத் தடுத்து குடல் இறக்கப் பிரச்னை வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறார் சங்கீதா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி ?
» வேனற்கட்டி வராமல் தடுக்க
» பொடுகு வராமல் தடுக்க
» வேனற்கட்டி வராமல் தடுக்க
» கட்டிகள் வராமல் தடுக்க
» வேனற்கட்டி வராமல் தடுக்க
» பொடுகு வராமல் தடுக்க
» வேனற்கட்டி வராமல் தடுக்க
» கட்டிகள் வராமல் தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum