தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு
Page 1 of 1
தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும். தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும்.
தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக்கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். இரவில் மது அருந்தும் பழக்கத்தை கைவிடவும். மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும்.
புகை பிடிப்பதும் நல்லதல்ல. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொள்ளவும். மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.பதப்படுத்தப்பட்ட மற்றும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கவும். அடிக்கடி குளிர்பானம் குடிக்கும் பழக்கத்தை கைவிடவும்.
அடிக்கடி காபி குடிப்பதை நிறுத்தவும். பழங்களை அப்படியே சாப்பிடலாம். மசாலா உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும். இரவு நேரத்தில் அரிசி மற்றும் ரவை, ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும். இரவில் தினமும் பால் சேர்க்கலாம்.
ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகிய ஐந்து பழங்களும் தூக்கத்துக்கு நல்லது. இவற்றை பழக்கலவை செய்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான தூக்கம் பெறலாம். தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை கட்டாயம் இருக்க வேண்டும். முளைகட்டிய பயறு வகை ஒன்றும் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்காய்களை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
தூக்கம் வராமல் தவிக்கும் வயதானவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்க்கவும். கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய உணவுகளை காலை நேரத்தில் உட்கொள்ளலாம். இத்துடன் ஏதாவது ஒரு காய் பொரியல் சேர்த்துக் கொள்ளும் போது நார்ச்சத்துடன் மற்ற வைட்டமின் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் தூக்கம் இன்மை பிரச்னையை விரட்டலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மறதிப் பிரச்னைக்கு தீர்வு
» டென்ஷன் பிரச்னைக்கு தீர்வு
» மறதிப் பிரச்னைக்கு தீர்வு
» மறதிப் பிரச்னைக்கு தீர்வு
» டென்ஷன் பிரச்னைக்கு தீர்வு
» டென்ஷன் பிரச்னைக்கு தீர்வு
» மறதிப் பிரச்னைக்கு தீர்வு
» மறதிப் பிரச்னைக்கு தீர்வு
» டென்ஷன் பிரச்னைக்கு தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum