தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்மைக்குறைவு: கணவன் கைது

Go down

ஆண்மைக்குறைவு: கணவன் கைது Empty ஆண்மைக்குறைவு: கணவன் கைது

Post  meenu Thu Feb 28, 2013 12:27 pm

தனது ஆண்மைக் குறைவை மறைப்பதற்காக மனைவியை சித்ரவதை செய்த பார்த்தசாரதி என்பவரை சென்னையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி, தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயா (30), போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விஜயாவிற்கும், பார்த்தசாரதிக்கும் இடையே திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் அண்மையில் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதற்கிடையே விஜயா, சென்னை தியாகராயநகர் காவல்துறை துணை ஆணையர் முத்துசாமியிடம், கணவர் பார்த்தசாரதி மீது புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் தனது கணவரின் ஆண்மைக் குறைவை மறைப்பதற்காக தன்னை துன்புறுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறுக் கூறியிருந்தார்.

பார்த்தசாரதிக்கும், தனக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றதாகவும், அப்போது தனது பெற்றோர் நல்லமுறையில் வரதட்சணை, சீர்வரிசை கொடுத்து திருமணத்தை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

திருமணம் முடிந்ததில் இருந்தே தனது கணவர் தன்னுடன் உறவு வைத்துக்கொள்வதற்கு தயங்கியதாகவும், 6 மாதம் வரையில் `செக்ஸ்' உறவு சரியாக நடக்கவில்லை. தானும் அதை பெரிதுபடுத்தவில்லை என்றும் குறிப்ப்பிட்டுள்ள அவர், பின்னர் தன் மீது பழியை சுமத்த முயன்றதாக விஜயா கூறியுள்ளார்.

அவருக்கு ஆண்மை குறைவு இருப்பதை அவரே ஒப்புக் கொண்டதாகவும், விஷயத்தை வெளியில் சொல்லி அவமானப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

டாக்டரிடம் சென்று ஆண்மைக்குறைவை போக்கி, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை

தனது ஆண்மைக்குறைவு வெளியே தெரியாமல் இருப்பதற்காக தன்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததாகவும் அந்த புகார் மனுவில் விஜயா கூறியுள்ளார்.

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் காவல்துறையினர், பார்த்தசாரதியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum