வண்ணமில்லா உலகம்
Page 1 of 1
வண்ணமில்லா உலகம்
பார்வையின்மையை குருடு எனச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன நிறக்குருடு? சாதாரணமாக பார்வையிலோ, பார்க்கிற காட்சிகளிலோ எந்தப் பிரச்னையும் இருக்காது. காட்சிகளின் நிறங்களில்தான் பிரச்னையே! அதைத்தான் ‘நிறக்குருடு’ என்கிறார்கள். நிறக்குருடு ஏன் வருகிறது? அதன் அறிகுறிகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விரிவாகப் பேசுகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.
‘நிறக்குருடுங்கிறது வழிவழியா பாதிக்கக்கூடிய ஒரு பிரச்னை. அதாவது மரபணுக் கோளாறுதான் பிரதான காரணம். இந்தப் பிரச்னையால பாதிக்கப்பட்டவங்களுக்கு சிவப்பு மற்றும் பச்சை நிறங்களைப் பிரிச்சுப் பார்க்கிற சக்தி இருக்காது. ஒட்டுமொத்த உலகத்தையும் அவங்களுக்குத் தெரியற ஒரே கலர்லதான் பார்ப்பாங்க.
சின்ன வயசுலயே கண்கள் ஆடறது, பவர் அதிகமாகறது, பார்வை தெளிவில்லாம இருக்கிறதெல்லாம் இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகளா இருக்கலாம். விழித்திரை பிரச்னையோட ஒரு அறிகுறியாகவும் இதை எடுத்துக்கலாம்.‘கோன் டிஸ்ராஃபி’ன்னு சொல்லக்கூடிய பிரச்னையும் இதுக்கான முக்கிய காரணம். நம்ம விழித்திரையில ‘கோன்’னு சொல்லப்படற அணுக்கள் இருக்கும்.
அந்த அணுக்கள்தான் படிக்கிறதுக்கும் எழுதறதுக்கும் கலர்களை அடையாளம் காண்பதற்கும் பொறுப்பு. அந்த கோன்களில் பிரச்னை வரும்போது, நிறக்குருடு பாதிக்கலாம். இது பெரும்பாலும் உறவுகளுக்குள்ள கல்யாணம் முடிக்கிறவங்களுக்கு அதிகம் வரும். இது தவிர, ருமட்டாயிட் ஆர்த்ரைடிஸ்னு சொல்லக்கூடிய மூட்டு வலி பிரச்னைக்காகவும், டி.பின்னு சொல்லக்கூடிய காச நோய்க்காகவும் சில மருந்துகளை அளவுக்கதிகமா எடுத்துக்கிறவங்களையும் அபூர்வமா இந்த நிறக்குருடு பிரச்னை பாதிக்கிறதுண்டு.
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்துல எக்ஸ் ரே எடுக்கிறதைத் தவிர்க்கிறதும் இந்த பாதிப்புலேருந்து தப்பிக்க வைக்கும். பொதுவா இந்தப் பிரச்னைக்கு வயது வித்தியாசம் கிடையாது. எந்த வயசுலயும் பாதிக்கும். பிறந்த குழந்தைக்கு, 3 வயசுக்குப் பிறகு கலர்களை வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியலைன்னு சந்தேகப் பட்டா, உடனே கண் மருத்துவர்கிட்ட காட்டி, ஆலோசனை எடுக்கலாம். சில பிரத்யேக சோதனைகளைச் செய்து கண் மருத்துவர் அதை உறுதிப்படுத்துவாங்க.
இந்த பாதிப்புக்கு சிகிச்சைகள் கிடையாது. பிரச்னையை சமாளிச்சு வாழப் பழகறதுதான் தீர்வு. பாதிப்பு இருக்கிறது தெரிஞ்சா, சம்பந்தப்பட்ட நபர்கள், டிராஃபிக் போலீஸ், பைலட், மருத்துவம் மாதிரியான சில முக்கியமான வேலைகளைத் தேர்ந்தெடுக்கிறதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.’’

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum