பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலா?
Page 1 of 1
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலா?
பெண்களுக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல் என்பது பொது இடங்கள் அனைத்திலுமே இருக்கும் என்றாலும், பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது, சமீப காலங்களில் அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பெண்களைப் பற்றி மிக மோசமான கருத்துகளைக் கூறுதல், தொட்டுப் பேசுதல், விசிலடித்தல், தவறான கண்ணோட்டத்தில் பார்த்தல் போன்றவை பாலியல் துன்புறுத்தல்களில் அடங்கும்.
பெண்களுக்கு எதிராக சாதாரணமாகவே இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடும் நிலையில், வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சொல்லவே தேவையில்லை.
அதிலும் பெண்கள் புதிய பொறுப்புகளை ஏற்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக அன்றாடம் நிகழ்த்தப்படும் வன்முறையாக அச்சுறுத்து நிலையை உருவாக்குதல், ஒருதலைப்பட்சமாகப் பேசுதல், புறக்கணித்தல் போன்றவையும் இதில் அடங்கும்.
பெண்களுக்கு எதிராக ஆணாதிக்கம் செலுத்துதல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்களை இழிவுப் படுத்துதல் போன்றவையும் பாலியல் வன்முறையில் அடங்கும்.
இதுபோன்ற வன்முறைகளில் இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே பெண்கள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.
பல நிறுவனங்களில் பாலியல் வன்முறை என்பதை கண்டுகொள்வதே இல்லை. இப்பிரச்சினையை முறையாக எதிர்கொண்டு தடுத்தல் அவசியம்.
பல நேரங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மறைக்கப்படுகின்றன. இப்பிரச்சினை பெண்களுக்கும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
பணிபுரியும் பெண்களில் 40 - 60 விழுக்காட்டினர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இதனைத் தடுக்க பாலியல் துன்புறுத்தல் எவையெவை என்பது குறித்து ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நிலவுதால், அது அவர்களை மட்டுமல்லாமல் பணி வழங்கும் நிறுவனங்களையும் மிக மோசமாகப் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க சட்ட நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி பாலியல் துன்புறுத்தலை களைந்து, அவற்றில் இருந்து பெண் பணியாளர்களைப் பாதுகாக்க நிறுவனங்களுக்கு வழிமுறைகள் வகுக்கப்பட்டன.
அதன்படி பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு உள்ளதாக அறிவுறுத்தப்பட்டது. இதனை பெரும்பாலான பெண்களும், பணி வழங்கும் நிறுவனங்களும் வரவேற்றுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் என்று தெரிந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது, நிறுவனங்களின் கடமை. அதே நேரத்தில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையாவதற்கு முன் உடன் பணிபுரிபவர்கள் அதனைத் தடுக்க முன்வர வேண்டும்.
பாலியல் பொருள்பட பேசுவது, ஆபாசப் படங்களை பெண்களிடம் காட்டுவது, குழுவாகச் சேர்ந்த ஆபாச நகைச்சுவை விஷயங்களைப் பேசுவது, தொடுதல், பதவி உயர்வுக்காக பாலியல் உடன்படுவதற்கு வலியுறுத்தல், பாலுறவுக்கு ஒத்துழைக்கா விட்டால், வேலையை விட்டு வெளியேற்றி விடுவதாக மிரட்டுதல், அல்லது பாலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே வேலை என பாலியல் துன்புறுத்தலின் வரையறை பல வகைப்படும்.
பாலியல்ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் திறன், நம்பிக்கை, உடல் நிலை போன்றவை பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
இதனால் வேறு இடங்களில் வேலை தேடுவது, வேலையில் ஆர்வமின்றி இருத்தல் போன்றவற்றாலும் சம்பந்தப்பட்ட பெண்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களில் பலர் ஏன் அதனை எதிர்க்காமல், அமைதியைக் கடைபிடிக்கிறார்கள்?
அதனை புகாராகத் தெரிவிப்பதால், தாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
புகார் கூறுவதால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதுவதால் அமைதியாக இருந்து விடுவது.
புகார் அளிப்பதால், ஏதும் நிகழ்ந்து விடப்போவதில்லை என்று நினைத்தல் அல்லது பயத்தினால் புகார் தெரிவிக்காமல் விட்டுவிடுவது.
விசாரணை மற்றும் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு வசதியில்லாமை.
எதிர்மறையான விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என்று கருதி புகார் கூறாமல் இருப்பது.
தம் மீதான மற்றவர்களின் பார்வை கெட்டுவிடும் என்று கருதுதல், அல்லது தங்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பாகி விடும் என்று கருதியும் புகார் தெரிவிக்காமல் இருந்து விடுவார்கள்.
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நிறுவனங்களும், அரசும் ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுத்து செயல்படுதல் அவசியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பணியிடங்களில் பெண்கள் கவனத்திற்கு
» பாலியல் பாலியல்
» பாலியல் தொந்தரவு
» பாலியல் வினோதங்கள்
» மனோரீதியான பாலியல் குறைபாடுகள்
» பாலியல் பாலியல்
» பாலியல் தொந்தரவு
» பாலியல் வினோதங்கள்
» மனோரீதியான பாலியல் குறைபாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum