தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

Go down

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை Empty ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

Post  meenu Thu Feb 28, 2013 12:00 pm

பெண்கள் கருத்தரிப்பதை தடுப்பதற்காக பெண்களுக்கான கருத்தடை மாத்திரை, ஆணுறைகள் என பல விஷயங்கள் வந்து விட்டன.

ஆனால், இதில் பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு பல்வேறு பின் விளைவுகள் ஏற்படுவதாலும், அடுத்த குழந்தைப் பேறின் போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தாலும் மாத்திரைகளை பெண்கள் விரும்புவதில்லை.

அடுத்ததாக ஆணுறை அணிந்து கொண்டு உடலுறவில் ஈடுபடுவதால், முழுமையான இன்பம் கிடைப்பதில்லை என்று ஆண்கள் மனம் வெதும்புகின்றனர்.

ஆனாலும், ஆணுறை அணியாமல் உடலுறவு மேற்கொண்டால், மனைவி கருவுற்றுவிடுவாரோ என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்த மன உளைச்சலைப் போக்கும் வகையில் ஒரு புதிய செய்தி வெளி வந்துள்ளது.

அதாவது, ஆண்களின் உயிரணு உற்பத்தியை பெரும் அளவுக்கு குறைக்கும் தன்மை கொண்ட மாத்திரைகளை சோதனை செய்து வருகிறோம் என்ற விஞ்ஞானிகளின் அறிவிப்புதான் அது.

அவ்வாறு உயிரணு உற்பத்தியைக் குறைக்கும் ஆண்களுக்கான மாத்திரைகள் நடைமுறைக்கு வந்தால் பெருமளவு ஆண்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த மாத்திரை இன்னும் சோதனை முயற்சி அளவிலேயே உள்ளது. சோதனையில் வெற்றி கிடைத்து அது நடைமுறைக்கு வரும்போது ஆணுறை அணிவது வழக்கத்தில் இல்லாமல் போய் விடும் என்றும் கருதப்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum