தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு நோயாளியின் வாழ்க்கை முறை

Go down

நீரிழிவு நோயாளியின் வாழ்க்கை முறை  Empty நீரிழிவு நோயாளியின் வாழ்க்கை முறை

Post  meenu Wed Feb 27, 2013 2:51 pm

நீரிழிவு நோய்
பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததுமே அதற்கான சிகிச்சை என்ன என்பது தான் நம்
எல்லோரின் கேள்வியாக இருக்கும்... ஆனால் இந்த நோயைப் பொருத்தவரை உண்மை
என்னவெனில் சிகிச்சை என்பதை விட வாழ்க்கை முறை என்பதே பொருந்தும்... நம்
உணவு, பழக்க வழக்கங்கள் இவைகளை சற்றே மாற்றி அமைப்பதே இந்த நோயின் அதி
முக்கியமான சிகிச்சை.


நீரிழிவு
நோய் ஆயுள் முழுவதும் தொடரும் நோய். இதை குணப்படுத்த இயலாது, ஆனால்
கட்டுப்படுத்த முடியும். கொழுப்பு மற்றும் மாவுச் சத்துகள் குறைவான உணவுகளை
உட்கொண்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக, அளவாக வைத்துக் கொள்வதும்,
தெடர்ந்து மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகள் உட்கொள்வதும் நீரிழிவு
நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.


பருமனான
நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை
பெருமளவில் கட்டுப்படுத்த இயலும். உடற்பயிற்சியும் ரத்த சர்க்கரை அளவு
கட்டுப்படுத்த மிகவும் உதவும்.


நீரிழிவு
நோயாளிகள் வாரத்தில் 2-4 நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இது இன்சுலின் எதிர்ப்பை 24-72 மணி நேரங்கள் வரை கட்டுப்பாட்டில்
வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு வகைகளை உட்கொண்டால்
மட்டும் போதாது, அவற்றை சரியான நேரத்தில் தவறாமல் உண்ண வேண்டும்.


உணவருந்தாமல் இருப்பது கேடு

புகழ்
பெற்ற ஆங்கிலக் கவிஞரான சுஜாதா பட் தன் "நீரிழிவு நோய்" எனும் கவிதையில்
அண்ணல் காந்தியடிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரால் இத்தனை
உண்ணாவிரதங்களை வெற்றிகரமாய் மேற்கொண்டிருக்க முடியாது என்கிறார். உண்மை
தான். நீரிழிவு நோயாளிகள் நேரத்திற்கு உணவருந்தாமல் இருப்பது அவர்களது உடல்
நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். சிறு மயக்கம் வருவது முதல்
உணர்விழந்த முழு மயக்க நிலைக்கு தள்ளப்படுவது வரை நிகழலாம். அதனால் அவர்கள்
விரதங்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.


மது மற்றும் புகைப் பழக்கங்கள் கூடாது

நீரிழிவு
நோயாளிகளுக்கு மது மற்றும் புகைப் பழக்கங்கள் அறவே கூடாது. ஏற்கனவே புகைப்
பழக்கம் உடைய நீரிழிவு நோயாளிகள் அதை நிறுத்தினால் மாரடைப்பு, ஸ்ட்ரோக்,
நரம்பியல் மற்றும் சிறுநீரகப் பழுதுகளை ஓரளவிற்குத் தவிர்க்கலாம்.


செயற்கை இனிப்பூட்டி

காபி, தேனீர் மற்றும் பழரசங்களுடன் Equal, Diabetis Dezire மற்றும் Sugarfree போன்ற செயற்கை இனிப்பூட்டிகளை கலந்து ரசித்து, சுவைத்து அருந்தலாம்.

வருடம் ஒரு முறை பரிசோதனை

அவர்கள்
வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனையும், சிறுநீரில் புரதச் சத்து உள்ளதா
என்பதையும், ரத்தத்தில் கிரியேடினைன் அளவு சீராக உள்ளதா என்பதை கண்டறியும்
பரிசோதனைகளை தவறாது செய்ய வேண்டும்.


இவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வதன் மூலமாக நீரிழிவு நோயாளிகள் பல்வேறு நோய் பாதிப்புகள் தங்களை அண்ட விடாமல் செய்யலாம்.

மேலும் இவர்கள் C-peptide test என்ற
பரிசோதனையை வருடத்திற்கு இரு முறை செய்து கடந்த 2-3 மாதங்களுக்கான ரத்த
சர்க்கரை அளவுகளின் சராசரியை அறிந்து கொண்டு மருத்துவச் சிகிச்சையை தொடரவோ,
தகவமைத்துக் கொள்ளவோ வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறை
» நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறை
» நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை
» நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்
» பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ப்ரக்ருதி முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum