வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சிகிச்சை!
Page 1 of 1

எச்.ஐ.வி. / எய்ட்ஸ் என்று தெரிந்த பிறகு வருகின்ற காசநோய் போன்ற சந்தர்ப்பவாத நோய்களுக்கு சிகிச்சைபெறும் போது உங்களைப் பற்றிய உண்மை நிலையை சிகிச்சை அளித்திடும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
முதிர்ந்த நிலையில் (Teriminal Stage) வரும் சந்தர்ப்பவாத நோய்களைக் கவனத்துடன் கையாள வேண்டும். நல்ல சுகாதார வசதிகளைப் பயன்படுத்தி, பயன்பெற ஏற்ற நல்ல மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் (Health Seeking Behaviour) அவசியம்.
வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ARV-Drugs)
எய்ட்ஸ் நோயின் பயங்கரத்தை தடுக்கவும், குறைக்கவும் மருந்துகள் பல உண்டு. வாழ்நாளை நீட்டிக்கவும் மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு வலு சேர்க்கும். நோய்க்கு எதிராகச் செயல்படும்.
இந்த மருந்துகளுக்கு வைரஸ் நோய் எதிர்ப்பு (அல்லது) எச்.ஐ.வி. எதிர்ப்பு மருந்து (ARV) என்று பெயர். இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்றாலும் இந்த மருந்துகள் மூலம் எச்.ஐ.வி. நோயை முழுமையாக குணப்படுத்த இயலாது. வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்துகளைப் பாதியில் நிறுத்தினால்,மீண்டும் நோய்த் தாக்கத்திற்கு ஆளாகலாம். மேலும் மருந்தை சில நாட்கள் எடுத்து விட்டு இடையில் நிறுத்தி விட்டால், இது வைரஸ் செயல்பாடுகளைக் குறைக்காமல் இருந்து விடும். இதனால் வைரஸ் அதிகமாகப் பெருகி, எய்ட்ஸ் வந்து விடுவதற்கான வாய்ப்புண்டு.
தன்னார்வ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையத்தின் (Voluntary Counselling and Testing Centre) மருத்துவ ஆலோசனையின்படி ARV (Anti Retro Viral) உட்கொள்ளுதல் அவசியம்.
வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ARV drugs) பற்றிய பயன்பாடுகளையும், எதிர்நோக்கக் கூடிய பக்க விளைவுகளையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தேவையின் அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்.
பக்க விளைவு :
மற்ற நோய்களுக்கு மருந்துகள் எப்படி பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றனவோ அதேபோல இந்த வியாதிக்கும் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் சில உண்டு. அதிக மயக்கம், பசியின்மை, வாந்தி, தோல் படை, அரிப்பு மற்றும் வழக்கத்திற்கு மாறான சில அறிகுறிகள் தென்படலாம்.
தன்னார்வ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம்
(Voluntary Counselling & Testing Centre)
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்தவ மனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இம்மையங்கள் உள்ளன. ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்துகொள்ள, உரிய வழி முறைகளைக் கடைபிடிப்பது அவசியம்.
தன்னார்வ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையத்தில் (VCTC) பரிசோதனை செய்துகொள்ள ஒரு ஒப்புதல் படிவத்தில் (Consent Letter) கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும்.
நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளவும் பிரச்சினைகளைக் களைந்திடவும் வழிகாட்டக் கூடிய ஆலோசகர் ஒருவர் அங்கு இருப்பார். அவரது ஆலோசனையின்படி பரிசோதனை செய்து கொள்வது குறித்து சுய விருப்பத்தின் அடிப்படையில் நீங்களே முடிவினை எடுத்திட வேண்டும்.
பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தால், இதே மையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். தரமான முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுவானவை
தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள சமுதாயத்தையும் சமூகக் கருத்துக்களையும் அனுசரித்து வாழ்வைத் தொடரப் பழகிக் கொள்ளுதல் வேண்டும். அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெற்றால் ஏற்றுக் கொள்க. அதிக எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு, விளக்கங்கள் கொடுத்து,ஏற்றுக் கொள்ள அவர்ளைத் தயார்படுத்தலாம். புரிந்து கொண்டவர்களிடம் உங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் மனச்சோர்iவு அகல வாய்ப்புண்டு. குற்ற மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும்.
எய்ட்ஸ் பாதிப்புக்கு தற்கொலை ஒரு தீர்வாகாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எய்ட்ஸ் பரவாமல் தடுக்கவும் எச்.ஐ.வி. / எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்விற்காகவும், எதிர்கால வாழ்வுக்காகவும் தொடர்ந்து பாடுபடலாம்.
அரசு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், அவற்றின் பணிகளை, சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வது எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் கடமை என்பதை உணர்தல் வேண்டும்.
எச்.ஐ.வி. / எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தவிர்க்க வேண்டியவை
பாதுகாப்பற்ற உடலுறவு, தற்கொலை உணர்வுக்கு இடம் கொடுத்தல், தனிமையில் இருப்பது, புகையிலை, மது, போதைப் பாக்கு, புகைப்பழக்கம் வைத்துக் கொள்வது, தேவைக்கு அதிகமான உணவு, விரக்தி மனப்பான்மை, பழி வாங்கும் எண்ணம், இரத்தம், விந்து, உடல் உறுப்புகளைத் (கண், சிறுநீரகம்) தானம் செய்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஆசன வழியாக உறவு (Anal Sex) மற்றும் வாய் வழி உறவு (Oral Sex) கொள்ளுதல், பிளேடு, பல்துலக்கும் குச்சி, பிரஷ் இவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், போதை ஊசி பழக்கம் உள்ளவர்கள் ஊசிகளை ஒருவருக்கு ஒருவர் பயன்படுத்திக் கொள்ளுதல் கூடாது.
காது குத்துதல் அல்லது உடலைக் குத்தப் பயன்படுத்திடும் உபகரணங்களைப் பலமுறை பயன்படுத்திடல் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட விட்டமின்-சி சிறந்த மருந்து.- ஆய்வில் தகவல்
» உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
» கண்புரைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாத புதிய மருந்து

» மருந்து லேப்களில் எலி, முயல்: நடிகை திரிஷா எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum