தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எலும்பு அடர்த்தி தேய்மானம்

Go down

எலும்பு அடர்த்தி தேய்மானம் 	 Empty எலும்பு அடர்த்தி தேய்மானம்

Post  meenu Wed Feb 27, 2013 2:14 pm

ஆண், பெண் இருவருக்குமே 40 வயதுக்குமேல் எலும்பு அடர்த்தி தேய்மானம் தொடங்கிவிடும். சாதாரணமாக ஏற்படும் இந்த தேய்மானத்தை துரிதப்படுத்தும் நோய் தான் "ஆஸ்டியோபொரோசிஸ்" என்று வழங்கப்படுகிறது. பல்வேறு நோய்களுடன் தொடர்புடைய விதத்தில் இதனை பல்வேறு வகைகளில் பிரிக்கலாம். ஆனால் தற்போது கொடுக்கப்படும் வழிகாட்டி மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபொரோசிஸ் பற்றியதே.

மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் துரித எலும்பு அடர்த்தி தேய்மானத்திற்கு ஈஸ்ட்ரோஜன் மாற்று ஹார்மோன்கள் எடுத்துக் கொள்வதுதான் பொதுவான சிகிச்சை முறையாகக் கடைபிடிக்கப்படுகிறது. இது முதலில் எலும்பிழப்பை அதிகப்படுத்தினாலும் பின்னதாக குணப்படுத்த தொடங்குகிறது. ஆனால் இது ஒன்று மட்டுமே தீர்வாகாது. ஆஸ்டியோபொரோசிஸ் உள்ள பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியம் அதிகம். ஆனால், இந்த இடர்பாடை குறைக்க பெண்களுக்கு பல வழிகள் உண்டு. குறிப்பாக முதுகெலும்பில் ஏற்படும் முறிவினால் உண்டாகும் வலிகளை குறைக்க சில வழிமுறைகள் உண்டு.

நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்

தவிர்க்க வேண்டியவை :

cofe
webdunia photo WD
காபி, மது, புரோட்டீன் அதிகமுள்ள உணவு. (அதாவது மாமிச இறைச்சியை குறைவாக சாப்பிடுதல்), கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகள், நன்றாக பதனப்படுத்தப்பட்ட மாவுச்சத்து உணவுகள் (வெள்ளை ரொட்டி பொருட்கள்), பால்சத்து பொருட்கள் இவைகளை தவிர்க்க வேண்டும்.

உண்ண வேண்டியவை :

பச்சை காய்கறிகள், (பசலைக்கீரை சாப்பிடலாம). தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலில் இலலாத எந்த ஒரு உணவையும் உட்கொள்ளலாம். குறிப்பாக ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளவர்களுக்கு வைட்டமின் கே பற்றாக்குறை இருக்கும். ஆகவே கே வைட்டமின் உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.

உடற்பயிற்சி :

உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது அவசியம். இதனால் வாரம் 3 முறை 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம் உடல் எடை அதிகரிப்பை தடுக்க, நடை, நாட்டியம், டென்னிஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகள்...
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum