அஞ்சறைப் பெட்டிக்குள் ஒளிந்திருக்கும் ஆரோக்கியம்
Page 1 of 1

அஞ்சறைப் பெட்டிக்குள்ளே ஆரோக்கியத்தைப் பொதித்து வைத்தனர் நம் முன்னோர்கள். தென்னிந்திய மக்களின் சமையல் அறையில் அஞ்சறைப்பெட்டி இல்லாமல் நாம் சமையலறையை காண முடியாது. அஞ்சறைப் பெட்டியில் உள்ள வெந்தயம், சீரகம், சோம்பு, கடுகு மிளகு என ஒவ்வொன்றும் மனிதனை நோயின்றி காக்கும் மிகச்சிறந்த பொருட்களாகும்.
வெந்தயம் லேசான கசப்புச்சுவை உடையது. இதனை உணவில் சேர்ப்பதால் உணவுக்கு நறுமணத்தைத் தருவதோடு நல்ல ஊட்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. எலும்பை உறுதியாக்கும் பாஸ்பரஸ் தாது உப்புக்களும், தசையைப் பாதுகாக்கும் லெசிதின் பொருளும் முட்டையில் உள்ள சத்துக்களைப் போல் நுக்லியோ அல்புமினும் நிறைந்துள்ளது.
குருதியழல், எலும்பு சம்பந்தப்பட்ட சுரம், உடல் எரிச்சல், நீர்வேட்கை, இளைப்பு, இருமல் இவையனைத்தையும் போக்கும் சக்தி வெந்தயத்திற்கு உண்டு. இரவில் சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு ஊறவைத்து காலையில் அந்த நீரை வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறும். வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும். செரிமான சக்தி அதிகரிக்கும். உதடு வெடிப்பு, நீங்கும். பல் ஈறுகள் பலப்படும்.
ஊறவைத்த வெந்தயத்தை பச்சரிசி சேர்த்து வேகவைத்து தேவையான அளவு தேங்காய்த்துருவல், பனைவெல்லம் சேர்த்து காலை உணவாக வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். நரம்புகள் புத்துணர்வு பெறும். வெந்தயம் அதிக நார்சத்து (50 சதவீதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், ரத்தத்திலுள்ள அதிக கெலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இத்தன்மையானது, வெந்தயத்தில் உள்ளது.
உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைப் பொறுத்தது. 25 முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது.ஆரம்ப காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம்.
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாக இடித்தோ, தண்ணீரிலோ, மோரிலோ கலந்து, உணவுக்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்து கொள்ள வேண்டும்.
· சிறுநீரகத்தை சீராக செயல்படவைக்கும்.
· வாயுத்தொந்தரவு நீங்கும்.
· இருமல், சளி, தொண்டைக்கட்டு குணமாகும். சருமம் புத்துணர்ச்சி பெறும்.
· எலும்புகள் பலப்படும். பல் கூச்சம் நீங்கும்.
வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி நீரில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் பாலுட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் பாதிப்புகள் நீங்கும். உடல் சூடு குறையும். கருப்பை பலப்படும். வெந்தயத் தோசையுடன் கருணைக் கிழங்கை அவித்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு குறைந்து, மூலநோயின் பாதிப்பு நீங்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஞ்சறைப் பெட்டிக்குள் ஒளிந்திருக்கும் ஆரோக்கியம்
» கண் ஆரோக்கியம்
» கர்ப்பகால ஆரோக்கியம்
» உடல் ஆரோக்கியம் பெற
» உடல் ஆரோக்கியம் பெற
» கண் ஆரோக்கியம்
» கர்ப்பகால ஆரோக்கியம்
» உடல் ஆரோக்கியம் பெற
» உடல் ஆரோக்கியம் பெற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum