தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணமாகப் போகுதாங்க மருத்துவர் ஆலோசனை அவசியம்! என்ன நீங்க ரெடியா?

Go down

மணமாகப் போகுதாங்க மருத்துவர் ஆலோசனை அவசியம்! என்ன நீங்க ரெடியா?  Empty மணமாகப் போகுதாங்க மருத்துவர் ஆலோசனை அவசியம்! என்ன நீங்க ரெடியா?

Post  ishwarya Wed Feb 27, 2013 2:00 pm

திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொடக்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தியாகவும் தொடரும். திருமணத்துக்குத் தயாராகிற அல்லது திருமணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்கள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துகிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘கல்லூரிப் பெண்கள்ல 30 சதவிகிதம் பேர் ரத்தசோகையால பாதிக்கப்பட்டிருக்காங்க. ஒல்லியாகணுங்கிற நினைப்புல கன்னாபின்னான்னு டயட் பண்றதும், ஜங்க் ஃபுட் சாப்பிடறதுமா இருக்கிறதால, தேவையான சத்து உடம்புல சேராம, ரத்த சோகை வருது. இது அவங்களுக்குக் கல்யாணமாகி, கருத்தரிக்கிற போது பிரச்னைகளைத் தரும். ரத்தசோகை இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கான சரியான சிகிச்சையை எடுத்துக்கிறது பல பயங்கர பாதிப்புகளைத் தவிர்க்கும்.

அடுத்து ஃபோலிக் அமிலக் குறைபாடு. கல்யாணமானதும் மருத்துவரோட உதவியோட இந்தக் குறைபாட்டுக்கான மருந்துகளை எடுத்துக்கிட்டா, மூளை மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்னைகள் இல்லாத, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

தட்டம்மைக்கான தடுப்பூசி மிக முக்கியம். கர்ப்பமானதும் தட்டம்மை வந்தால், உறுப்புக் கோளாறுகளுடைய குழந்தை பிறக்கலாம். இந்தத் தடுப்பூசி போட்டுக்கிட்டு, 6 மாதங்கள் கழிச்சுதான் கருத்தரிக்கணும். மாதவிலக்கு சுழற்சி முறை தவறியிருந்தா, அதுக்கும் சரியான மருத்துவ ஆலோசனை அவசியம்.

சில பெண்களுக்கு பிறவியிலிருந்து பிரச்னைகள் இருக்கும். இதய நோய், வலிப்பு, சிறுநீரகப் பிரச்னை, நீரிழிவு... இதெல்லாம் உள்ள பெண்கள், கருத்தரிக்கிறதுக்கு முன்னாடி மருத்துவ ஆலோசனையை அவசியம் எடுத்தாகணும். சில வகை இதய நோய் உள்ளவங்க,
கருத்தரிக்கக் கூடாது.

குடும்பநல மருத்துவரைப் பார்க்கிறதுக்குப் பதில், அந்தந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரைப் பார்க்கறது நல்லது. ஏற்கனவே எடுத்துக்கிட்டிருக்கிற மருந்துகளை மாத்தி, கருவை பாதிக்காத அளவுக்கு பாதுகாப்பான மருந்துகளைக் கொடுக்க இது வசதியா இருக்கும். அடுத்து மார்பகக் கட்டி, கர்ப்பப்பை கட்டிகள் ஏதாவது இருக்காங்கிற சோதனையும் அவசியம்.

உடல் ரீதியான ஆலோசனை எவ்வளவு முக்கியமோ, அதைவிட மனசுக்கான ஆலோசனையும் முக்கியம். கணவன்-மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணத்துக்கு முன்னாடியோ, கருத்தரிக்கிறதுக்கு முன்னாடியோ ஒரு கவுன்சலிங் எடுத்துக்கலாம்.

கடைசியா குழந்தைக்கான திட்டமிடல். உடனடியா குழந்தை வேணாம்னு நினைக்கிறவங்க, மருத்துவரோட ஆலோசனைப்படி, அவங்க உடல் பரிசோதனைக்குப் பிறகு சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்கலாம். சரியான திட்டமிடல் இல்லாம கருத்தரிச்சு, பிறகு அது வேணாம்னு கலைக்கிறவங்களுக்கு, கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, பிற்காலத்தில் குழந்தையே இல்லாமப் போகலாம்.’’

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum