மழைக்காலம் நெருங்குகிறது மலேரியா தாக்கும் அபாயம்
Page 1 of 1

மழைக்காலத்தில் பரவும் மலேரியா காய்ச்சல் நோய் தடுப்பு மாத்திரைகள் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியாகிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செய்யவில்லை. இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சரும், அதிகாரிகளும் தொடர்ந்து புகழ்பாடி வருகின்றனர். ஆனால் மக்களோ பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், காலரா போன்ற தொற்று நோய்களின் பிடியில் சிக்கி கடந்த 7 மாதங்களாக தவித்து வருகின்றனர்.
இதனை சுகாதாரத்துரை அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையாக எடுப்பதில்லை. இதனால் தொற்றுநோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்றுநோய்களை தடுக்க ஆலோசனை கூட்டங்கள் போடுவதோடு சரி. இதனால் எவ்வித பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், மழைக்காலம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலாவதியாகும் தடுப்பு மாத்திரைகள்
ஒவ்வொரு ஆண்டு தவறாமல் கொசுவினால் பரவும் மலேரியா காய்ச்சலால் அதற்குள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியாவை தடுக்கவாவது... சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார்களா என்றால்... அதற்கும் இல்லை என்று பதில் வருகிறது. மழை நேரத்தில் பரவும் மலேரியா காய்ச்சல் ஓரிரு வாரங்களில் வேகமாக பரவ தொடங்கிவிடும். சுகாதாரத்துறையின் சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களுக்கு தடுப்பு மருந்தாக குளோரோ பின் மற்றும் பிரைமா குயின் மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது.
ஆனால் பொது சுகாதாரம், மாவட்ட சுகாதாரம் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையிடம் தற்போது இருப்பில் உள்ள குளோரோ பின், பிரைமா குயின் மாத்திரைகள் இந்த மாதத்துடன் (ஆகஸ்ட்) காலாவதியாகும் நிலையில் உள்ளது.இதுவரை புதிதாக மாத்திரைகளை சுகாதாரத் துறை வாங்கவில்லை. கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை.இப்படியே சென்றால்... இந்த ஆண்டு மலேரியா காய்ச்சலின் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக தொற்றுநோய்களில், மலேரியாவும் முக்கியமானதாக இருக்கிறது. பொது சுகாதார பிரச்னைக்கு சவாலாகவும் உள்ளது. தமிழகத்திற்கு ஒரு ஆண்டுக்கு குளோரோ பின் 70 லட்சமும், பிரைமா குயின் 40 லட்சமும் தேவைப்படும். சுகாதாரத்துறையிடம் மாத்திரைகள் தீர்ந்துவிட்டாலோ அல்லது மாத்திரைகளின் காலாவதியாகும் நேரம் நெருங்குவதற்கு முன்பே தேவையான மாத்திரைகள் வாங்கி இருப்பு வைக்கப்படும்.தற்போது இருப்பில் உள்ள மாத்திரைகள் விரைவில் காலாவதியாக உள்ளது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மலேரியாவுக்கு எவ்வளவு மாத்திரைகள் தேவை என்பதை பொது சுகாதாரத்துறையினர் தெரிவிப்பார்கள். அதன்படி டென்டர்விட்டு, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படும். ஆண்டுக்கு குறைந்தது 4 முறை குளோரோ பின் மாத்திரைகள் வாங்கப்படும். அவசரமாக தேவைப்பட்டால் மட்டும் பிரைமா குயின் மாத்திரைகள் வாங்கி தருவோம். இதற்கான பணத்தை மத்திய அரசு கொடுக்கும். மருந்து மாத்திரைகளை வாங்குவதற்கு தமிழக அரசும் நிதி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியிலும் மருந்து, மாத்திரைகள் வாங்கப்படும்’ என்றார்.
2011ம் ஆண்டில் 22,156 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் மலேரியா காய்ச்சல் காணப்படுகிறது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 2010ம் ஆண்டில் 17,086 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 35.3 சதவீதம் கிராமங்களிலும், 64.7 சதவீதம் நகர்ப்புறங்களிலும் காணப்பட்டது. இதே போல் 2011ம் ஆண்டில் 22,156 பேர் மலேரியாவால் தாக்குதலுக்கு ஆளாகினர். இதில், 29.92 சதவீதம் பேர் கிராமப்புறங்களிலும், 70.08 சதவீதம் பேர் நகர்ப்புறங்களிலும் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் தாக்கும் அபாயம்
» உடலை இளைக்கச் செய்யும் மருந்துகள்... சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்

» மலேரியா : அதிக மருந்து ஆபத்தாகும் - ஆய்வு எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum