அடிக்கடி வரும் கோபம் உயிரை பறிக்கும் காலன்...
Page 1 of 1

அடிக்கடி கோபப்படுவது இருதயம் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி மரணத்தை நிகழ வைக்கிறது. சிறப்பாக வாழ நினைப்போர் சினத்தை அடக்க வேண்டும். கோவை கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கூறியதாவது:
மனித உடலில் மூளையைவிட இருதயம் முக்கியமானது. நிறைய பேருக்கு இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயத்தில் ஓட்டையுடன் பல குழந்தைகள் பிறக்கின்றன. இதனால், குழந்தையின் வளர்ச்சி குறைவாக உள்ளது. இக்குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் நீல நிற குழந்தைகளாக மாறிவிடும். அப்படி மாறிய பிறகு இருதய பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கும்போது கடும் சிக்கல் ஏற்படும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இருதய நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
இன்றைய தலைமுறையினர் பலருக்கு அடிக்கடி கோபம் கொப்பளிக்கிறது. கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம். அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறது. நாம் எண்ணியது நடக்காவிட்டால், சொல்வதை யாராவது கேட்காவிட்டால் நமக்கு கோபம் வருகிறது. கோபம் தற்காலிக உணர்வுதான். ஆனால், அந்த நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். தற்போது இருதய நோய் பள்ளி மாணவர்களையும் தாக்குகிறது.
கோவையில் ஒரு பள்ளியில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 8 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி பருவத்திலேயே இருதய நோயை கண்டறிய �கார்டியோ ரிஸ்க் யூத்� என்னும் புதிய திட்டம் கே.ஜி மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருதயம் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதன் நன்றாக இருக்கமுடியும். மாணவர்கள் மட்டுமின்றி, 40 வயதை கடந்த பெரியவர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவு வகைகளை தவிர்க்கவேண்டும்.
எண்ணெயில் பொறித்து எடுத்த மிக்சர், முறுக்கு, போண்டா, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்ற உணவுகளை அடியோடு தவிர்க்கவேண்டும். அத்துடன், புகை பிடிப்பது, பாஸ்ட் புட் சாப்பிடுவது, இனிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும். உணவு பழக்கவழக்கத்தை மாற்றி, தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும். இவற்றை கடைபிடித்தால் மாரடைப்பு நோயில் இருந்து தப்பிக்கலாம். விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்ற முடியும்.
இருதய நோய்க்கு பல்வேறு அதிநவீன சிகிச்சை கே.ஜி மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது.
கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது.
உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது. அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால், மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடுகிறது. உச்சகட்டமாக உயிரும் போய்விடுகிறது. எது கிடைக்கவில்லை என கோபப்படுகிறமோ, அதனால் ஏற்படும் இழப்பு, கிடைக்கிறதைவிட அதிகமாக உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அடிக்கடி வரும் ஏப்பம் குறைய
» துளசியைப் பறிக்கும் முறை
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும் - ஆய்வில் தகவல்
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும்.- ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum