தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உயர குறைபாடு மூலிகை எண்ணெயில் சரியாகுமா?

Go down

உயர குறைபாடு மூலிகை எண்ணெயில் சரியாகுமா?  Empty உயர குறைபாடு மூலிகை எண்ணெயில் சரியாகுமா?

Post  ishwarya Wed Feb 27, 2013 12:23 pm

கோவை ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தின் முதுகுதண்டு, முதுகு வளைவு, கால் உயரம் மற்றும் கால் வளைவு சீரமைப்பு நிபுணர் டாக்டர் ஈஸ்வர் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு;

கால் உயர குறைபாடுக்கு பிரதான காரணம் என்ன? இதை குழந்தை பருவத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியுமா?

பல காரணம் இருக்கிறது. பிறவி ஊனம் என கூறலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து குணப்படுத்தி விடலாம். ஆனால் சில நேரங்களில் கண்டுபிடிக்க முடியாது. குழந்தை வளர்ந்த பின்னர் தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இதை குணப்படுத்தி விட முடியும். அது மட்டுமல்லாமல் கால் மற்றும் இடுப்பு மூட்டு நோய் தொற்று ஏற்படுவதாலும், மற்றும் காயங்களினாலும் இது போன்ற பிரச்னை வரலாம். இவற்றை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

எனக்கு வயது 24. சிறு வயதில் இருந்தே கால் வலி இருக்கிறது. தற்போது சிறிது தூரம் நடந்தாலே வலிக்கிறது. எனது கால்கள் சிறிது வளைந்திருப்பதாக பார்ப்பவர்கள் கூறுகிறார்கள். எனக்கு அந்த குறைபாடு தெரியவில்லை. கால் வளைவு காரணமாக கால் வலிக்குமா?

கண்டிப்பாக கால் வலி வரலாம். சாதாரணமாக கால் இருப்பதை விட சற்று வளைவு அதிகமாக இருந்தால் கால் வலி வர வாய்ப்பு இருக்கிறது. உடனே தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

எனது 3 வயது குழந்தைக்கு வலதுகால் வளைவாக உள்ளது. வைட்டமின் குறைபாடு. சத்தான உணவு கொடுத்தால் கால் நிமிர்ந்துவிடும் என்கிறார்கள். இது சரிதானா?

இந்த குறைபாடு வைட்டமின் குறைபாட்டினாலும் ஏற்படலாம். ஆனால் இது மட்டும் காரணம் என்று கூறமுடியாது. பிறவியிலேயே இந்த குறைபாடு இருக்கலாம். அல்லது பரம்பரையாக அல்லது மூட்டு உள்பக்கம் வளர்ச்சி (ப்ளவுண்ட்ஸ் டிசீஸ்) பாதிக்கப்பட்டு இருப்பதாலும் கால் வலி ஏற்படலாம்.

கால் உயர குறைபாடு எத்தனை செ.மீ வரை இருந்தால் பிரச்னை இருக்காது. எவ்வளவு செ.மீக்கு மேல் இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்?

இரண்டு செ.மீ. குறைபாடு இருந்தால் காலணி உபயோகித்து சரி செய்யலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை. இரண்டு முதல் நான்கு செ.மீ. வரை உயர குறைபாடு இருந்தால் அறுவை சிகிச்சை செய்தோ அல்லது காலணி அணிவதன் மூலமோ சரி செய்யலாம். ஆனால் நான்கு செ.மீ-க்கு மேல் உயர குறைபாடு இருந்தால் கண்டிப்பாக அறுவை சிகிச்சை தான் சரி செய்ய வேண்டும். சிகிச்சை மேற்கொள்ளாது விட்டால் இடுப்பு மற்றும் மூட்டு தேய்மானம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனது மகனுக்கு வயது 18. 10ம் வகுப்பு முடிந்தபோது விபத்தில் சிக்கினான். கால்கள் இரண்டும் உயர அளவு வித்தியாசமாக உள்ளது. நடக்க சிரமப்படுகிறான். இதற்கு மருத்துவம் பார்த்தால் செலவு அதிகமாகும். இதனால், அவனே சிகிச்சை வேண்டாம் என்கிறான். தந்தையான எனக்கு இதை பொருத்துக்கொள்ள முடியவில்லை.

ஆபரேஷன் செய்து தான் சரி செய்ய முடியும். குறைந்த செலவே ஆகும். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சையை ஆரம்பிக்கவும்.

கால் சாய்வு, கால் உயர பிரச்னைக்கு குறைந்த செலவில், சிறந்த பலனளிக்கும் சிகிச்சை முறை என்று எதை கூறலாம். இதுகுறித்து பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வு என்ன?

இலிசரோவ் என்ற வளையம் போன்ற கருவியின் மூலம் சரி செய்யலாம். ஏற்கனவே சிகிச்சை முறை பற்றி விரிவாக கூறிஉள்ளேன். கால் வளைவு பிரச்னைக்கு தகடு பொருத்தியோ, இலிசரோ கருவி பொருத் தியோ அல்லது வயதானவர்களுக்கு மூட்டு தேய்மானத்தால் அதிகமாக கால் வளைவு ஏற்பட்டிருந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையிலோ சரிசெய்யலாம்.

எனது குழந்தைக்கு ஒரு வயது ஒரு மாதம் ஆகிறது. மற்ற குழந்தைகளை போல் இவனும் நடப்பான் என்று இருந்தேன். ஆனால், இன்னும் நடக்கவில்லை. கால் தொய்வாக உள்ளது. கால் சாய்வு, உயர குறைபாடு பிரச்னை காரணமாக அவனால் நடக்க முடியவில்லையா?

கால் தொய்வாக இருப்பதால் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. அல்லது பிறவியிலேயே வரக்கூடிய மூளை முடக்குவாதமாக இருக்கலாம். அல்லது போலியோ, நரம்பு சம்பந்தப்பட்ட நோயாக கூட இருக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum