மருத்துவ நல நெறிமுறைகள்: தேச மனித உரிமை ஆணையம் உருவாக்குகிறது!
Page 1 of 1
மருத்துவ நல நெறிமுறைகள்: தேச மனித உரிமை ஆணையம் உருவாக்குகிறது!
நோயாளிகளுக்கு உரிய மருத்துவத்தை அளிப்பது, அவர்களை முறையாக நடத்துவது, அவர்கள் நன்கு குணமடையும் வரை மருத்துவமனையில் வைத்து காப்பது ஆகியனத் தொடர்பான மருத்துவ நல வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தேச மனித உரிமை ஆணையம் முயற்சித்து வருகிறது.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் உள்ளிட்ட கொடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மிக கவனமாக கண்காணிக்கவும், அவர்கள் முழுமையாக நலம் பெற உரிய மருத்துவ வசதிகளைப் பெறவும் வழி வகுக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள், ‘நோயாளிகளின் உரிமைகள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருவதாக தேச மனித உரிமை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மன நலம் பாதிக்கப்பட்டோர் மீது நடத்தப்படும் ‘மீறல்’களை அடுத்து இப்படிப்பட்ட ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் முடிவை மனித உரிமை ஆணையம் மேற்கொண்டுள்ளது.
மராட்டிய மாநிலம் பூனேயில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய தேச மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பி.சி. சர்மா, “நீண்ட கால சிகிச்சை தேவையுடன் மருத்துவமனையில் உள்ள பல மன நல நோயாளிகள், அவர்களின் மறுவாழ்விற்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாத நிலையில் வெறுமனே மருத்துவமனைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மருத்துவ நல நெறிமுறைகள்: தேச மனித உரிமை ஆணையம் உருவாக்குகிறது!
» இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட
» நல்லிணக்க நடவடிக்கை போதவில்லை' : ஐநா மனித உரிமைகள் ஆணையம்
» விஜயகுமாரை எதிர்த்து மனித உரிமை கமிஷனுக்குப் போவேன்!-வனிதா
» வீழ்வோமென்று நினைத்தாயோ..?: கியூபா எதிர்கொள்ளும் மனித உரிமை சவால்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum