மூலம் குறைய
Page 1 of 1
மூலம் குறைய
அறிகுறிகள்:
உள்மூலம்.
வெளிமூலம்.
தேவையான பொருள்கள்:
துத்தி வேர்.
சோம்பு.
நில ஆவாரை.
பனங்கற்கண்டு.
பசும்பால்.
இளநீர்.
செய்முறை:
துத்தி செடியின் வேரை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
சோம்பை ஒரு மண் பானையில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி பிசைந்து கழுவி நிழலில் உலர்த்தி நன்றாக இடிக்கவும்.
நில ஆவாரையை மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
பிறகு மூன்றையும் ஒன்றாக போட்டு இடித்து சலித்து கொள்ளவும். இதனுடன் பனங்கற்கண்டை சுத்தம் செய்து இடித்து பொடித்து போட்டு மண்பானையை மூடியால் மூடி அதற்கு மேல் துணியால் கட்டி வைக்கவும்.
பிறகு தரையில் பானை நிரம்பும் அளவு குழி தோண்டி வைத்து மண்ணால் மூடவும். 7 நாட்கள் கழித்து எடுத்து வேறு புதிய பானையில் வைத்து பத்திரப்படுத்தி சாப்பிட்டு வரவும்.
உபயோகிக்கும் முறை:
காலை சாப்பாட்டிற்கு முன் 1 தேக்கரண்டி சாப்பிட்டு 150 மி.லி ஆறிய வெந்நீர் குடிக்கவும். மாலையும் இது போல் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலம் குறையும்.
சாப்பிட கூடாதவை:
இந்த மருந்தை சாப்பிடும் போது கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு, எண்ணெய் பலகாரங்கள், மாமிச உணவு,கார உணவு,பழஞ்சோறு போன்றவற்றை தவிர்க்கவும்.
சாப்பிட கூடியவை:
இந்த மருந்தை சாப்பிடும் போது புழுங்கலரிசி சோறு, இளங்காய்கள், மோர், தயிர், வாழைப்பழம், மிளகு, சீரகம், பூண்டு, நெய், பால், தேன், மிளகு பொங்கல், இடியாப்பம், இட்லி, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை பழம் ஆகியவற்றை சாப்பிட்டு வரவும்.
குறிப்பு:
இந்த மருந்து சாப்பிட்டு வரும் நாட்களில் மலச்சிக்கல் ஏற்பட்டால் உணவில் நெய், பால், மோர், கீரைகளை சேர்த்து கொள்ளவும்.
இந்த மருந்து சாப்பிட்டால் சிலருக்கு அதிகமாக தாகம் ஏற்படும். தாகம் ஏற்படும் போது 1க்கு 10 பங்கு நீர் கலந்த மோரை உப்பிடாமல் அருந்தி வரவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum