திருவாலங்காடு
Page 1 of 1
திருவாலங்காடு
நடராஜர் நாட்டியமாடிய பஞ்ச சபைகளில், முதல் தலம் திருவாலங்காடு. இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராக கோவில் கொண்டுள்ளார். இது, ரத்தின சபை என்று போற்றப்படுகிறது.
சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, `சிதம்பர ரகசியம்' என்பார்கள். அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது.
ஸ்தல வரலாறு:
சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் அல்லவா? அப்போது, அவர் யார் என்று சிவனிடம் கேட்டார் பார்வதி. அதற்கு பதிலளித்த இறைவன், `என் அம்மை வருகிறாள்!' என்று கூறினார்.
அதோடு, `என்ன வரம் வேண்டும்?' என காரைக்கால் அம்மையாரிடம் அவர் கேட்டபோது, `எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்...' என்றார் அம்மையார். அவர் கேட்ட வரத்தை அருளினார் சிவபெருமான்.
இதற்கிடையில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், காரைக்கால் அம்மையார் அங்குள்ள தன் கோவிலில் தங்கப் போவதாகவும், தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார்.
அதன்படி அந்த மன்னன், நடராஜருக்கு பின்புறம், சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். இப்போதும் இங்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
இதையே, `ஆலங்காட்டு ரகசியம்' என்கின்றனர். இந்த திருத்தலம் சிவன் கோவிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோவில்களைப் போல தீர்த்தம் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து வசதி:
இந்த திருத்தலம் திருவள்ளூரில் இருந்து, 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பஸ்வசதி உள்ளது.அல்லது திருவள்ளுர் வழியாகவும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum