தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எய்ட்ஸ் நோய் பாதித்தோரை அரவணைக்கும் டாக்டர் மனோரமாவும் "செஸ்" அமைப்பும்

Go down

எய்ட்ஸ் நோய் பாதித்தோரை அரவணைக்கும் டாக்டர் மனோரமாவும் "செஸ்" அமைப்பும்  Empty எய்ட்ஸ் நோய் பாதித்தோரை அரவணைக்கும் டாக்டர் மனோரமாவும் "செஸ்" அமைப்பும்

Post  meenu Tue Feb 26, 2013 6:15 pm

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளை காண நேர்ந்தால் நாம் என்ன செய்வோம்?

அக்குழந்தைகளைப் பார்த்து பரிதாபப்படுவோம். முடிந்தால் பொருளுதவி செய்ய முற்படுவோம்.

அந்த குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளது என அறிய நேர்ந்தால்...?
யோசிக்கிறோமல்லவா... ?

ஆனால் டாக்டர் மனோரமா யோசிக்காமல் செயலில் இறங்கினார்.

1994-ம் ஆண்டு.
அப்போது டாக்டர் மனோரமா எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் மனோரமாவால் சிகிச்சை பெற்று வந்த அந்த இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களோ பாதுகாவலர்களோ யாரும் வரவில்லை. விசாரித்ததில் அக்குழந்தைகள் அனாதைகள் என்பது தெரியவந்தது. அக்குழந்தைகளை அன்புடன் அரவணைத்தார் டாக்டர் மனோரமா.

"இந்த குழந்தைகளுக்கு நேர்ந்தது போன்ற நிலை எந்த குழந்தைக்கும் நேரக்கூடாது. உலகில் எய்ட்ஸ் என்ற கொடூர நோய் எவருக்கும் தாக்காமல் இருக்க அனைவருக்கும் விழிப்புணர்வு கிடைக்க வேண்டும்" இந்த உன்னத நோக்கத்துடன் அன்று (1994) டாக்டர் மனோரமாவால் தொடங்கப்பட்டதே "செஸ்" (CHES - Community Health Education Society) அமைப்பு.

தன் அரசுப் பணியை ராஜினாமா செய்த டாக்டர் மனோரமா, முழு நேரமாக செஸ் மூலம் தொண்டு புரிய ஆரம்பித்தார். தற்போது எய்ட்ஸ் நோய் பாதித்த ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கென காப்பகம் நடத்துவது, ஏழை-பணக்காரர் என்ற பேதமையுமின்றி அனைத்து மக்களிடமும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் எவரும் நெருங்கத் தயங்கும் பாலியல் தொழில் புரியும் பெண்கள், அரவாணிகளையும் விழிப்புணர்வு செய்வது என இவரது தலைமையின் கீழ் எய்ட்ஸுக்கு எதிராக ஒரு யுத்தத்தையே செய்துக் கொண்டிருக்கிறது செஸ் அமைப்பு.

"செஸ்" அமைப்பின் செயல்பாடுகள் :-

"தோழி" - பாலியல் தொழில் புரியும் பெண்களுக்கு செக்ஸ் கல்வி :-

"தோழி" திட்டத்தின் மூலம் பாலியல் தொழில் புரியும் பெண்களை அணுகி, அவர்களுக்கு தகுந்த, தேர்ச்சி பெற்ற சமூகப் பணியாளர்கள் மூலம் செக்ஸ் கல்வி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாக செக்ஸ் கல்வி புகட்டப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பான உடலுறவு கொள்ளாததால் உண்டாகும் நோய்கள் குறித்தும், பாதுகாப்புடன் இருப்பது எப்படி? போன்ற கல்வி அளிக்கப்படுகிறது. குறிப்பாக ஆணுறை பயன்படுத்துவதின் அவசியத்தை அவர்கள் உணரும் வகையில் வழிவகை செய்யப்படும். எய்ட்ஸ் கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது செஸ் அமைப்பு.

"தூளி" - எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் காப்பகம் :-

இரண்டு குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இந்த காப்பகத்தில் தற்போது 35 சிறுவர், சிறுமியர் உள்ளனர். இங்கு இக்குழந்தைகளுக்கு தொடர்ந்து தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதோடு, ஊட்டச்சத்துக்களுடன் கூடிய உணவுகள் அளிக்கப்பட்டு அவர்களின் உடல் ஆரோக்கியம் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. இவற்றுடன் அவர்களுக்கு பள்ளிக் கல்வியும் வழங்கப்படுகிறது. அதன் மூலம் அக்குழந்தைகள் இயல்பான வாழ்க்கைக்கு வழிவகை செய்யப்படுகிறது.

"விடியல்" - எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை காப்பது :-

விடியல் திட்டத்தின் மூலம் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து அவர்களை அரவணைத்துச் செல்லும் வகையில் காப்பகம் மூலம் உறுதுணை புரியப்படுகிறது.

"விழிப்புணர்வு" :-

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து செய்து வரும் செஸ் அமைப்பு அடிக்கடி முகாம்களை அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆணுறை உபயோகிப்பதன் அளவு சென்னையில் உயர்ந்திருப்பதற்கு செஸ்ஸின் விழிப்புணர்வு பிரச்சாரமும் காரணம் என்றால் அது மிகையாகாது.

இந்தியாவிலேயே முதல் முறை :-

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் 3 குடும்பங்களால் இந்த அமைப்பிலிருந்து தத்தெடுக்கப்பட்டு உள்ளன. மூன்று தம்பதியினர் மனமுவந்து எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளை தத்தெடுக்க முன்வந்தனர் என்றால் இவ்வமைப்பின் விழிப்புணர்வு செயலுக்கு உதாரணமாக வேறு எதுவும் தேவையில்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக இது போன்ற சம்பவம் நடைபெற்றதென்றால் அது செஸ் அமைப்பு மூலம் தான். (அவ்வப்போது அந்த 3 குழந்தைகளையும் சிகிச்சை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.)

எய்ட்ஸ் விழிப்புணர்வில் உலகமே வியக்கும் வண்ணம் இம்மாதம் (டிசம்பர்) மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது "செஸ்".

இந்த மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொள்வது 250 பாலியல் தொழில் புரியும் பெண்கள். இது மட்டும் செய்தி அல்ல. இதில் பாலியல் தொழிலாளர்களுடன் அவர்களுடைய வாடிக்கையாளர்களும் கலந்து கொள்கின்றனர். நம் புருவங்களை உயர்த்தும் செய்தி இதுவே.

இது எப்படி சாத்திமானது என செஸ் அமைப்பின் நிர்வாக அமைப்பாளர் முத்துபாண்டியனை கேட்டபோது, "பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்களுக்கு முகாம்கள் நடத்துவதால் அவர்களைக் கூட எளிதாக இது போன்ற முகாம்களுக்கு எங்களால் கூட்டுவது எளிது. ஆனால் பாலியல் தொழிலாளர்களுடன், அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சேர்த்து மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினால் எளிதாக எய்ட்ஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்யலாம். அந்த நோக்கத்தில் ஒவ்வொருவரையும் கஷ்டப்பட்டு அணுகி, புரிய வைத்து எங்கள் தொண்டு நிறுவனத்தின் பணி புரிபவர்களால் இந்த முகாமிற்கு வர சம்மதிக்க வைத்தோம் என்றார்.

இவ்வாறு முழு மூச்சுடன் செயல்படும் இந்த அமைப்பில் தற்போது முழு நேரப்பணியாளர்களாக 75 தன்னார்வலர்கள் டாக்டர் மனோரமாவின் தலைமையில் செயல்பட்டு வருகின்றனர்.

"தூளி" திட்டத்தில் உள்ள குழந்தைகள் போன்று இனி எந்த குழந்தைக்கும் இந்நிலை வரச்செய்தல் கூடாது; நம் நாட்டில் ஒவ்வொருவரும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறித்து உணர்ந்து கொண்டு எய்ட்ஸ் பரவுவதை முற்றிலும் தடுப்பதையே டாக்டர் மனோரமா செஸ் அமைப்பினர் அனைவரின் கனவு.

"கனவு மெய்ப்பட வேண்டும்"
இவர்களின் கனவு நிச்சயம் மெய்ப்படும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தொடர்புக்கு :-

198 A, ரங்கராஜபுரம் மெயின் ரோடு,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024.

தொலைபேசி : 91+044+24726655
-----------91+044+2473283
-----------------52133249

ஃபேக்ஸ் : 91+044+24806896

ஈமெயில் : ches_cheschennai@yahoo.co.in
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum