நினைவாற்றல் வேண்டுமா? மீன் சாப்பிடுங்க!
Page 1 of 1
நினைவாற்றல் வேண்டுமா? மீன் சாப்பிடுங்க!
மீன், மாமிசம், பால் போன்ற விட்டமின் பி-12 அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது, வயதான காலத்தில் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் நரம்பியல் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் அறிக்கை இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
சுமார் 61 முதல் 87 வயது வரையிலான 107 பேருக்கு மூளை ஸ்கேன், நினைவாற்றல் சோதனை, உடற்பயிற்சி பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் வைட்டமின் பி-12 அதிகம் சாப்பிட்டவர்களுக்கு அதிக நினைவாற்றல் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் இரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு அதில் உள்ள பி-12 அளவும் ஆய்வு செய்யப்பட்டது. மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து ஸ்கேன், நினைவாற்றல் சோதனை நடத்தப்பட்டது.
அதன்படி வைட்டமின் பி12 அளவு அதிகம் உள்ளோருக்கு, பி12 குறைவாக உள்ளவர்களைக் காட்டிலும் 6 மடங்கு அளவு அதிக நினைவாற்றல் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்படி, மூளையைப் பாதிக்கக் கூடிய பல காரணிகள் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பி12 குறைபாடு ஒரு பொது சுகாதார பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றல் குறைந்து காணப்படுவோருக்கு வைட்டமின் பி-12 அளிப்பதன் காரணமாக குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியுமா என்பதற்கு இந்த ஆய்வில் எந்த பதிலும் இல்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நினைவாற்றல் வேண்டுமா? மீன் சாப்பிடுங்க!
» ஆகவே மீன் சாப்பிடுங்க!
» மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!
» மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது
» வலியில்லா பிரசவம் வேண்டுமா? கர்ப்பிணிகளே துளசி சாப்பிடுங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum