உடலில் ஏற்படும் தழும்புகளைப் போக்க...
Page 1 of 1
உடலில் ஏற்படும் தழும்புகளைப் போக்க...
பொதுவாக தோலில் தழும்புகள் ஏற்படுவது இயற்கை. இந்த தழும்புகள் அல்லது சுருக்கங்களுடன் கூடிய தழும்புகளை போக்குவது எப்படி?
உடல் எடையை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி, கருவுற்ற பெண்கள், பளு தூக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் உடலின் பல பகுதிகளிலும் சுருக்கங்களோ அல்லது தழும்புகளோ ஏற்படலாம்.
உடலின் தசை வளர்ச்சியடைவதால், ஏற்படும் தழும்புகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், அது பின்னாளில் நிரந்தரமாக அழிக்க முடியாத தழும்புகளாகி விடும் என்பதை பலரும் அறிவதில்லை.
உடல் எடை அதிகரிப்பதற்கு முன்பே அதற்கேற்ற எளிதான சிகிச்சை முறைகளுக்கு ஆயத்தமாகிக் கொள்ள வேண்டும் என்கிறார் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ரேஷ்மி சுதா.
உடலின் தோலானது, எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு ஏதுவாக அதிக அளவு தண்ணீரை அருந்த வேண்டும். உடலில் உள்ள ஈரப்பதத்தை வெளியேற்றக் கூடிய வகையிலான காபி, தேநீர் போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும். அல்லது வீட்டிலேயே சிகிச்சையாக எவ்வளவு காபி அல்லது தேநீர் குடிக்கிறீர்களோ அதே அளவுக்கு தண்ணீர் குடிக்கலாம்.
இதன் காரணமாக தோல் பகுதி வறட்சி ஏற்பட்டு, அதனால் ஏற்படக்கூடிய தழும்புகளில் இருந்து தப்பித்து விடலாம்.
கர்ப்பிணிப் பெண்களாக இருந்தால் தினமும் வயிறு, தொடைப் பகுதியிலும்,பின்புறத்திலும், மார்பகத்திலும் மருத்துவரின் அறிவுரைப்படி கோகோ பட்டர் அல்லது ஷியா நட் பட்டரை காலையிலும், மாலையிலும் தடவலாம். இதனால் தழும்புகள் மறைந்து பின்னர் அவை சுருக்கங்களாவதைத் தவிர்க்கலாம்.
தவிர, தோலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதுடன், தேவைப்படும் போது எலாஸ்டிக் (விரிவடையும்) தன்மையை அளிக்கவும் அது உதவும்.
உடற்பயிற்சி செய்யும்போது, இதுபோன்ற லோஷன்களை கைகள், தோள்பட்டைகளில் தடவிக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் தழும்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
சிலர், லோஷன்களுடன் வைட்டமின் -ஈயும் சேர்த்து எடுத்துக் கொள்வார்கள்.
சில நேரங்களில் உடலில் ஏற்படும் தழும்புகள், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாகவே மறைந்து விடக்கூடிய நிலையும் உண்டு.
தழும்புகளைப் போக்குவதற்கு ஏற்றது விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய். என்றாலும், எந்த சிகிச்சையைப் பயன்படுத்தினாலும், உங்களின் மருத்துவர்களை கலந்தாலாசிக்காமல் பயன்படுத்துதல் நல்லதன்று.
குழந்தைகளுக்குப் பாலூட்டும் பெண்களாக இருக்கும்பட்சத்தில், சிலவகை எண்ணெய் உடலில் உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை என்பதால், அது குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடிய வாய்ப்புண்டு. எனவே தழும்புக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருக்கட்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடலில் ஏற்படும் தழும்புகளைப் போக்க...
» உடலில் ஏற்படும் அரிப்பு குறைய
» உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
» உடலில் ஏற்படும் நோய்கள் குறைய
» பித்தத்தை போக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum