இதய நோயை ஏற்படுத்தும் கல்லீரல் கொழுப்பு!
Page 1 of 1

இதயத்தின்
தோற்றம் எப்படி இருந்தாலும் அது பிரச்சினையை ஏற்படுத்தாது. ஆனால்
கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால் அது பல்வேறு இதய நோய்களை
ஏற்படுத்தக்கூடியது என்று தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
கல்லீரலில்
கொழுப்பு தேங்குவதால், இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துவதாகவும், அதிக அளவு
கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை
உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரலில் மிக அதிக அளவுக்கு கொழுப்பு சேர்வதால், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உடல்
பருமன் என்பது பரவலாகி விட்ட இந்தக் காலக் கட்டத்தில், குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை கல்லீரல் கொழுப்பு என்பதும் அதிகரித்து வருவதாகவும், அவை
தொடர்பான நோய்களும் உயர்ந்து வருவதாகவும் மருத்துவ ஆய்வுக்குத் தலைமை
வகித்த டாக்டர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.
இதனால் உடல்ரீதியாகப் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஒரே வயதுடைய உடல் பருமன் கொண்ட மற்றும் கல்லீரல் கொழுப்பு உடையவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அடிவயிற்றில்
தேங்கும் கொழுப்பினால் ஏற்படும் பாதிப்புகளை விடவும், கல்லீரலில் தேங்கும்
கொழுப்பானது அதிக இதய நோய்களை உருவாக்கும் என்று அறியப்பட்டுள்ளது.
உடல் பருமனைக் குறைக்கும் போது, கல்லீரலில் உள்ள கொழுப்பானது தானாகவே கரைய நேரிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலோரி கட்டுப்பாடு காரணமாக நிலைமை மேலும் மேம்படுவதாகவும், ஈரலில் உள்ள கொழுப்பு குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே உடல்பருமனைத் தவிர்ப்போம். கொழுப்புச் சத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவோம்!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதய நோயை ஏற்படுத்தும் கல்லீரல் கொழுப்பு!

» கல்லீரல் நோயை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்
» கல்லீரல் நோய்களுக்கு
» கல்லீரல் வலி குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum