புகையால் பிறக்கும் முரட்டுக் குழந்தை
Page 1 of 1
புகையால் பிறக்கும் முரட்டுக் குழந்தை
கர்ப்பிணிப் பெண்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
புகைபிடிக்கும்
பழக்கத்தால் எடை குறைவான குழந்தைகள் பிறக்க நேரிடும் என்று ஏற்கனவே
தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் புகை பிடிப்பதால்
மிகவும் வன்முறையுடன் கூடிய குழந்தைகள் பிறக்கக்கூடும் என்று தற்போது தெரிய
வந்துள்ளது.
டச்சு - கனடா நாட்டின் கூட்டு ஆராய்ச்சியில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
மான்ட்ரியல்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல பேராசிரியர் ஜீன் செகுயின் மற்றும்
நெதர்லாந்தின் லேடன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹ்யூஜ்ப்ரக்டஸ்
இணைந்து நடத்திய ஆய்வில், கர்ப்பிணிகள் புகைபிடிப்பதால் அவர்களுக்கு
முரட்டுத்தனமான குழந்தைகள் பிறப்பதாகத் தெரிய வந்துள்ளது.
கர்ப்பிணிப்
பெண்கள் புகைபிடிப்பதால், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் மூளை
நரம்புகளில் புகையிலையின் தாக்கம் இருப்பதுடன், அந்தக் குழந்தைகள் மிக மிக
மூர்க்கத்தனமான குணங்களுடன் (violent behaviour) பிறப்பதாகத் தெரிய வந்துள்ளது.
சமூக
எதிர்ப்பு குணம் கொண்ட பின்னணியுடன் கர்ப்பிணிகள் இருப்பதால், அவர்களின்
குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் விடுதல், சட்ட விதிகளை மதிக்காமல்
நடத்தல் போன்ற குணங்களுடன் பிறப்பதாகத் தெரிய வந்துள்ளது.
அதிலும்
புகை பிடிக்கும் பெண்கள் 21 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பின்
அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் வன்முறையை கொண்டவர்களாக
இருப்பார்கள் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதிலும்
கர்ப்பத்தின் போது, நாளொன்றுக்கு 10 சிகரெட்டிற்கு மேல் பிடிக்கும்
வழக்கம் உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் முரட்டுத்தன விழுக்காடு
அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது 18 மாதம் முதல் மூன்றரை வயதுடைய குழந்தைகள் வரை சுமார் 1,745 பேரிடம் நடத்தப்பட்டது.
தாயின்
புகைப்பழக்கம் மட்டுமின்றி விவாகரத்து, மன அழுத்தம், மகப்பேறு கல்வி,
கர்ப்பத்தின் போது தாயின் வயது போன்றவையும் குழந்தைகளின் வன்முறைக்
குணங்களுக்கு காரணமாகிறது என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புகையால் பிறக்கும் முரட்டுக் குழந்தை
» சாக்லேட் சாப்பிட்டால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்
» பிறர் புகையால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை 6 லட்சம்
» புகையால் புதைந்து போகும் வாழ்க்கை: நாளை புகையிலை எதிர்ப்பு தினம்
» வயதான அப்பாவிற்கு பிறக்கும் குழந்தை ஆட்டிசம் குறைபாடு ஏற்படும்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum