தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோபி 65

Go down

கோபி 65                          Empty கோபி 65

Post  ishwarya Tue Feb 26, 2013 2:04 pm

என்னென்ன தேவை?

காலிஃபிளவர் (பெரியது) - 2,
தயிர் - 2 கப்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 முதல் 3 டீஸ்பூன்,
கடைகளில் விற்கும் தந்தூரி கலர் (இது நல்ல சிவப்பு நிறத்தைக் கொடுக்கும்) - 1 சிட்டிகை,
இஞ்சி, பூண்டு விழுது (சுமார் 1 துண்டு இஞ்சியையும், 10 பல் பூண்டையும் அரைக்க வேண்டும்) - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்.
தாளிக்க...
கடுகு - 2 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - கால் கப்.


எப்படிச் செய்வது?

காலிஃபிளவரை ஆய்ந்து கொதிக்கும் தண்ணீரில் 1 நிமிடம் போட்டு, சிறிது உப்பு சேர்த்துக் கீழே இறக்கி வைக்கவும். பூச்சிகள் இருக்கிறதா எனப் பார்த்து, பிறகு சிறு சிறு பூக்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தயிரில் உப்பு மற்றும் எல்லா தூள் வகைகள், இஞ்சி, பூண்டு விழுது, கலர் சேர்த்து, காலிஃபிளவரையும் சேர்த்து ஊற வைக்கவும். அடுப்பில் எண்ணெய் காய வைத்து தாளிக்க வேண்டியவற்றைச் சேர்க்கவும். ஊற வைத்த காலிஃபிளவரை சேர்த்து மொறுமொறுவென வறுத்து எடுத்து வைக்கவும். எண்ணெயில் பொரிக்கத் தேவையில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum