தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல்

Go down

பீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல் Empty பீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல்

Post  meenu Tue Feb 26, 2013 1:47 pm

பன்றிக் காய்ச்சல் - உலக நாடுகளையே இன்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் கொடிய நோயின் பெயர் இது.

கடந்த ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல் (சிக்குன் குன்யா) என்ற நோய் உலகளவில் பல்லாயிரக் கணக்கான மக்களை வாட்டி வதைத்ததை போல், இந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல் நோய் உலக மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.



பீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல் Img1090805107_1_1
FILE முதன்
முதலில் மெக்சிகோ நாட்டில் உருவானதாக கூறப்படும் இந்த கொடிய நோய், பின்னர்
பல்வேறு நாடுகளுக்கும் பரவி, தற்போது இந்தியாவின் புனே நகரை சேர்ந்த ரியா
ஷேக் என்ற 14 வயது பள்ளி மாணவியின் உயிரை பறிக்கும் அளவுக்கு பரவியுள்ளது.
இதனால், ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில், இந்நோய்
பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும், அதிலிருந்து நம்மை நாமே
வருமுன் காப்பதும் அவசியமாகிறது.


பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1 N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது.

கடந்த
1930ம் ஆண்டுகளில் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய்
கண்டறியப்பட்டது. நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த வைரஸ்
மிக அரிதான ஓர் மரபு அணு தொகுதியை கொண்டிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள்
பெரும் ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போதே இந்த பன்றிக்
காய்ச்சல் வைரஸ் மிக அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
விடுத்தது. பின்னர் கடந்த 1965ல் ஐரோப்பாவிலும், 1976ம் ஆண்டில்
நியூஜெர்ஸியிலும் இந்நோய் கண்டறியப்பட்டது.


பன்றிக் காய்ச்சல் பரவும் முறை:

H1N1 வைரஸ்,
ஓர் பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு வேகமாக பரவுகிறது. நீண்டகால
முயற்சிக்கு பின்னர் மனிதரை தாக்குதகிறது. ஆனால், மனிதரிடமிருந்து மற்றொரு
மனிதருக்கு மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum