கொதிக்க வைத்த குடிநீரே சிறந்தது
Page 1 of 1
கொதிக்க வைத்த குடிநீரே சிறந்தது
வேறு
எந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை விடவும், கொதிக்க
வைத்து வடிகட்டிய நீரே குடிப்பதற்கு சிறந்தது என்று மீண்டும்
மீண்டும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் மனிதனுக்கு மஞ்சள்காமாலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் குடிநீர் மூலமாகவும், நிமோனியா, ப்ளு, மற்றும் இதர வைரஸ் காய்ச்சல்கள் காற்றின் மூலமாகவும் பரவுகிறது.
பல
வீடுகளில் கண்ணை மூடிக் கொண்டு கேன் தண்ணீரை வாங்கி
குடிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சரியாக
சுத்திகரிக்கப்படாத கேன தண்ணீர் மூலம் எலிக் காய்ச்சல்
நோய் பரவ அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேன்களில்
கொண்டு வரப்படும் நீர், முதலில் பெரிய பெரிய தண்ணீர்
சேமிக்கும் ராட்சத தொட்டிகளில்தான் தேக்கி வைக்கப்படுகிறது.
இதில் எலியின் எச்சங்கள் கலக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த
தண்ணீரை சுடுபடுத்தினால் மட்டுமே அதில் இருக்கும் கிருமிகள்
அழியும். ஆனால் எந்த கேன் தண்ணீரும்
சுடுபடுத்தப்படுவதில்லை. வெறும் ரிவர்ஸ்
ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு மற்றும் கடினத்தன்மையை நீக்கி
சுத்திகரிக்கப்படுகிறது. எனவே, நோய் கிருமி அழியாமல் தண்ணீரில்
அப்படியே இருக்கும். எனவே இதுபோன்ற கேன் தண்ணீரில் எலிக்
காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது.
எலியின் எச்சங்களின்
மூலம் உருவாகும் கிருமி லெப்டோ பைரோசிஸ் என்ற எலிக்
காய்ச்சலை உருவாக்குகிறது. இந்த நோய்க்கிருமி குறைந்த பட்சம் 52 டிகிரி
வெப்பத்தில் மட்டுமே அழியும் தன்மையுடையது.
இதுமட்டுமல்லாமல்
நன்கு காய்ச்சப்படாத தண்ணீர் மூலமாக சாதாரணமாக பல நோய்கள்
தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து
வடிகட்டியப் பின்னரே குடிக்க வேண்டும். அதுதான் சரியான
முறையாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொதிக்க வைத்த குடிநீரே சிறந்தது
» தண்ணீர் குடிப்பது அத்தியாவசியம்
» காபி குடிப்பதால் நன்மை இருக்கு
» அதிக சூடாக டீ குடிப்பதைத் தவிருங்கள்
» கீரைகளில் சிறந்தது
» தண்ணீர் குடிப்பது அத்தியாவசியம்
» காபி குடிப்பதால் நன்மை இருக்கு
» அதிக சூடாக டீ குடிப்பதைத் தவிருங்கள்
» கீரைகளில் சிறந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum