ஐம்பத்தாறில் அம்மாவான கோட்டம்மா!
Page 1 of 1
ஐம்பத்தாறில் அம்மாவான கோட்டம்மா!
பொதுவாக பெண்கள் தங்களது
56ஆவது வயதில், பேரன்-பேத்திகளுடன் விளையாடிக் களிப்பார்கள். ஆனால். ஆந்திர
மாநிலம் குண்டூர் மாவட்டம் டெமர்லபாடு பகுதியைச் சேர்ந்த எஸ். கோட்டம்மா
56 வயதில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்றால் நம்ப
முடிகிறதா?
ஆம். முதல்முறையாக தாய்மையடைந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் கோட்டம்மா.
கடந்த மாதம் 29ஆம் தேதியன்று குழந்தையைப் பெற்றெடுத்துள்ள அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
விவசாயக்
குடும்பத்தைச் சேர்ந்த கோட்டம்மாவால், மெனொபாஸ் எனப்படும் மாதவிலக்கு
நிற்கும் வரை கர்ப்பம் தரிக்க முடியாமல் போய் விட்டது. என்றாலும் அவர் தனது
ஊக்கத்தையும், முயற்சியையும் கைவிடவில்லை.
குழந்தை
பெறுவதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கோட்டம்மா, டாக்டர்
செனக்காயலா உமாசங்கரை அணுகினார். டாக்டர் உமாசங்கர், முன்னாள் சுகாதாரத்
துறை அமைச்சர் எஸ். அருணாவின் மகனாவார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் கோட்டம்மாவிற்கு சிகிச்சையளித்ததுடன், ஐ.வி.எஃப் எனப்படும் சினைமுட்டை மாற்று (embryo transfer) சிகிச்சை மூலம் தற்போது குழந்தை பிறந்திருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
9 மாதம்
10 நாட்கள் கோட்டம்மா கருவை தனது வயிற்றில் சுமந்துள்ளார். 2.2 கிலோ
எடையுடன் குண்டூர் அருகே கோத்தபேட்டையில் ஆரோக்கியமான ஆண் குழந்தையை
கோட்டம்மா சிசேரியன் மூலம் பெற்றெடுத்தார்.
கோட்டம்மாவின் கவலையெல்லாம் தான் கர்ப்பமாக இருந்த போது தனது 80 வயதான தாயாரைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்பது தான்.
ஆனால்
விதி வலியது. அந்தத் தாயும் தனது மகளின் 56 வயதில் பிறந்த
பேரக்குழந்தையைப் பார்த்து விட்டார். கோட்டம்மாவின் கனவு நனவாகி விட்டது.
கோட்டம்மா
தனது குழந்தை மற்றும் தனக்கு சிகிச்சை கொடுத்து வாழ்வில் ஒரு அர்த்தத்தை
ஏற்படுத்தித் தந்த டாக்டர் உமா சங்கருடன் பத்திரிகைகளுக்கும்,
தொலைக்காட்சிகளுக்கும் புகைப்படத்திற்காக போஸ் கொடுத்தார்.
50-லும் ஆசை வரும் என்பதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், இப்போது 56இலும் குழந்தை பிறந்துள்ளது.
நவீன மருத்துவ உலகிற்கு ஒரு சல்யூட்.
கோட்டம்மா போன்ற மன உறுதி அனைத்துப் பெண்களுக்கும் வரட்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum