நீங்கள் மருந்துக்கு அடிமையானவரா?
Page 1 of 1
நீங்கள் மருந்துக்கு அடிமையானவரா?
பொதுவாக மது,
புகைப்பழக்கம், கஞ்ஜா, பிரவுன் சுகர் போன்றவற்றை தொடர்ந்து
பயன்படுத்துபவர்களைத்தான் இவ்ற்றிற்கு அடிமையானவர்கள் என்று
கூறுவோம். ஆனால், தவறான விஷயம் என்று தெரியாமலேயே பலரும்
மருந்துகளுக்கு அடிமையாக உள்ளனர்.
ஒவ்வொரு
நாளும் தேவையற்ற மருந்துகளை உடலுக்குள் செலுத்திக்
கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. பலரும் இது நல்ல மருந்து, இதனால் உடலுக்கு பலன்
உண்டு, தலை வலிக்கு இந்த மருந்து சிறந்தது என்று எண்ணி பல
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்துக்
கொள்கிறார்கள்.
WD மேலும்
சிலர், தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி என்றால் உடனடியாக
ஏதாவது ஒரு மருந்துக் கடைக்குச் சென்று அதற்கான மருந்தை வாங்கி
போட்டுக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அந்த மருந்தை
போட்டதும் தலைவலியோ, காய்ச்சலோ, வயிற்றுவலியோ
சரியாகிவிட்டால், அந்த மாத்திரையை பத்திரப்படுத்தி வைத்துக்
கொண்டு, எப்போது இந்த பிரச்சினைகள் வந்தாலும் உடனடியாக அதனைப்
பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
உண்மையிலேயே
அவர்களுக்கு என்ன பிரச்சினை, இந்த மருந்து எப்படி
செயல்புரிகிறது என்று தெரிந்து கொள்ளாமல் உடலுக்கு ஒவ்வாத
மருந்தினை தொடர்ந்து பயன்படுத்துவதும் மருந்திற்கு
அடிமையானவராகத்தான் கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள்
எழுதித் தரும் மருந்துகளை குறிப்பிட்ட காலத்திற்கும் மேலாக
பலரும் பயன்படுத்துகிறார்கள். நோய் வருவதற்கான அறிகுறி
தெரிந்ததுமே மருந்துகளை பயன்படுத்தத் துவங்கிவிடுகிறார்கள்.
சிலர் தலைவலி என்றதும் உடனடியாக ஒரு மாத்திரையை வாங்கிப்
போட்டுக் கொள்கிறார்கள். இதெல்லாம் அவர்களது உடல் நலனைக்
கருத்தில் கொண்டு செய்யும் செயல்கள் அல்ல. அவர்கள் மருந்து
மாத்திரைகளுக்கு அடிமையாக இருப்பதைத்தான் காட்டுகிறது.
மருத்துவர்
குறிப்பிடும் கால அளவு வரை ஒரு மாத்திரையை சாப்பிட வேண்டியது
எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு அதற்கு மேலும் சாப்பிடாமல்
நிறுத்த வேண்டியதும் அவசியமாகிறது.
சில
மருத்துவர்கள் வலி நிவாரணிகளையும், நோய் எதிர்ப்பு
சக்தியையும் அளவிற்கு அதிகமாக நோயாளிகளுக்கு வழங்குவார்கள்.
ஏன் எனில், அந்த மருத்துவரிடம் சென்றதும் வலி நின்றுவிட்டது,
நோய் குணமாகிவிட்டது என்று பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரு
நோக்கத்தில் சில மருத்துவர்கள் இதனைச் செய்கிறார்கள். இது
நோயாளியின் உடல் நலனை பாதுகாக்கும் சக்திகளை வேரோடு
பிடுங்கும் செயலாகும். இதுபோன்ற மருத்துவர்களிடம்
எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம்.
பலரும்,
அந்த மருத்துவரிடம் செல்லுங்கள், உடனடியாக நோய் குணமாகும்
என்று வலியுறுத்துவார்கள். உடலில் ஏற்படும் எந்த நோயும்
உடனடியாக குணமாகாது. படிப்படியாகவே குணமாகும், குணமாக வேண்டும்.
அதுதான் இயல்பு. மாறாக உடனடியாக குணப்படுத்தப்படும் என்று ஒரு
மருத்துவர் கூறினால், அவர் நமது நோயைக் குணப்படுத்தவில்லை,
நோயை உடனடியாக செயலிழக்க வைக்கிறார் அவ்வளவே, செயலிழக்க
வைக்கப்பட்ட கிருமி அதிவிரைவில் பலம்பெற்று பல்வேறு வகைகளில்
உடலைத் தாக்க ஆரம்பிக்கும்.
WD நோயாளிகள்
பலரும், காய்ச்சலுக்காக மருத்துவரிடம் சென்றால், ஊசி
போடுங்கள் என்று கேட்டு போட்டுக் கொள்கிறார்கள். ஆனால்,
மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் மூலமாகவே
குணம் பெறலாம். ஊசி என்பது அவசியமல்ல. ஊசியைப் போட்டு
காய்ச்சலை குணப்படுத்தலாம். ஆனால், அந்த காய்ச்சல் எதனால்
வந்ததோ அதனை என்ன செய்வது,
சமீபத்தில்
மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு, வலி
நிவாரணி மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டே காரணமாகக்
கூறப்படுகிறது. எனவே, எந்த மருந்தையும் எடுத்து கொள்ளும் முன்,
அதன் செயல் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையில்லாமல் எந்த மருந்தையும் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். மருந்துக்கு அடிமையாகாதீர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீங்கள் மருந்துக்கு அடிமையானவரா?
» பெண்களுக்கு உகந்த உளுந்து
» பெண்களுக்கு உளுந்து
» பெண்களுக்கு உளுந்து
» கண் சோர்வுக்கு மருந்து
» பெண்களுக்கு உகந்த உளுந்து
» பெண்களுக்கு உளுந்து
» பெண்களுக்கு உளுந்து
» கண் சோர்வுக்கு மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum