லெப்டோஸ்பைரோசிஸ் – மழைக்கால அச்சுறுத்தல்
Page 1 of 1

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே பெய்த மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியிருக்கும் நிலையில், இப்போது பெய்யத் தொடங்கியுள்ள மழையால் மேலும் நீர் தேங்கும், சராசரி மக்களுக்கும் அன்றாட வாழ்க்கை அல்லாடல் ஆகிவிடும். இப்படிப்பட்ட நிலையில்தான் மேலும் ஒரு அச்சுறுத்தல் உருவாகிறது.
FILE
அது லெப்டோஸ்பைரோசிஸ் என்றழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். லெப்டோஸ்பைரா அல்லது ஸ்பைரோகீட் எனும் கிருமியால் (பாக்டீரியா) இந்நோய் ஏற்படுகிறது. எலி, பெருச்சாளி, பன்றி போன்ற கழிவு நீர் தேக்கங்களில் வாழும் பிராணிகள் கழிக்கும் சிறுநீரில் கலந்து இந்தக் கிருமி வெளியேறி, கழிவு நீரில் கலக்கிறது. மழைக்காலத்தில், குறிப்பாக நகரங்களில் ஆங்காங்கு தேங்கும் மழை நீருடன், கழிவு நீர், சாக்கடை நீர் கலக்கும்போது, அதில் இந்த பாக்டீரியாவும் கலந்துவிடுகிறது.
இந்த நீரில் நாம் நடக்கும்போது, நமது காலில் உள்ள தோல் வெடிப்புகள் அல்லது சிறு காயங்கள் மூலமாக நமது இரத்த நாளங்களிலும் இந்த பாக்டீரியா நுழைகிறது. இந்த பாக்டீரியா இரத்தத்தில் கலந்து பெருகி, ஒரு வாரம் முதல் 10 நாட்கள் கடந்த பிறகு நமக்கு காய்ச்சல் ஏற்படும். அதனை வெறும் காய்ச்சல்தானே என்று அதற்காக ஒரு மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டு அல்லது ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு மறந்துவிட்டோமானால் அதுவே விபரீதமாகிவிடும்.
ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சலாக இருந்து நிலை மாறி, தலை வலி, கண் பாதிப்பு (கண்கள் இரத்தத்தால் தோய்ந்ததுபோல் சிவந்துவிடும்), உடம்பு வலி, களைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, 102 டிகிரியைத் தாண்டும் காய்ச்சல் என்று ஏற்பட்டால், அது லெப்டோஸ்பைரோசிஸ் ஆக இருக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்ய மருத்துவரை அணுக வேண்டும்.
இதைச் செய்யத் தவறும்போது இந்த நோய் உயிரைக் குடிக்கும் நோயாக ஆகிவிடும் அபாயம் ஏற்படுகிறது. கடுமையான மூச்சடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, காமாலை ஆகியன ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நோய் தாக்கிய 10 நாளில் வாய், மூக்கின் வழியாக இரத்தம் வெளியேறுதல், இதய இயக்கம் பாதிப்பு, உள் இரத்தக் கசிவு ஆகியன ஏற்படும் அபாயம் உள்ளதென லெப்டோஸ்பைரோசிஸ் நோய் தொடர்பான விழுப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவ இணையத் தளம் எச்சரிக்கிறது.
FILE
அயல் நாடுகளில் லெப்டோஸ்பைரோசிஸ் நோயை நகர்ப்புறம் சார்ந்த ஒரு நோயாகவே பேசுகின்றனர். அங்குள்ள தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் கலக்கும்போது இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர். இதற்காக பல ஆய்வுகள் நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டும் உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லெப்டோஸ்பைரோசிஸ் – மழைக்கால அச்சுறுத்தல்
» மழைக்கால மேக்கப் டிப்ஸ்
» மழைக்கால சளி பிரச்னைகளுக்கு
» மழைக்கால நோய்கள்!
» மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்
» மழைக்கால மேக்கப் டிப்ஸ்
» மழைக்கால சளி பிரச்னைகளுக்கு
» மழைக்கால நோய்கள்!
» மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum