சர்க்கரை வியாதியும் கர்ப்ப பாதிப்பும்
Page 1 of 1
சர்க்கரை வியாதியும் கர்ப்ப பாதிப்பும்
சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும் போது சாதாரணமாக கர்ப்பம் பாதிக்கப்படுவதில்லை.
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை வியாதியின் போது சர்க்கரைக்காக கருக்கலைப்பு செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லாமலே கருச்சிதைவுகள் அதிகரிக்கின்றன.
சர்க்கரை வியாதியால் கண் பார்வை மங்குதல், சிறுநீரக கோளாறு முதலியன ஏற்பட்டாலொழிய கருக்கலைப்பு செய்யத் தேவையில்லை.
சர்க்கரையால் கர்ப்பச் சன்னியின் முன் நச்சு மூன்று மடங்கிற்கும் மேலாகக் காணப்படுகிறது. அவற்றை உரிய காலத்தில் பக்குவமாக கவனிக்கத் தவறிவிட்டால் இளஞ்சிசு மரண விகிதம் கூடிவிடலாம்.
சர்க்கரை வியாதியினர் 20 முதல் 30 விழுக்காடு பேருக்கு பனிநீர்ப் பெருக்கம் எற்படுகிறது. இவர்களுக்கு பிள்ளைப் பேறு கடினமாகலாம்.
அறுவைகள் ஆயுதப் பிரயோகங்கள் முதலியவை பயன்படுத்தும் நிலை அதிகரிக்கலாம்.
கருக்குழந்தையின் எடை கூடுவதால் கருக்குழந்தை மாறிக்கிடத்தல் முதலியன நிலைகள் ஏற்படலாம்.
கருக்குழந்தையின் எடை அதிகரிப்பதால் 70 விழுக்காடு பேருக்கு அறுவைப் பேறு தேவைப்படுகிறது என்றால் இன்சுலின் உதவியால் கருக்குழந்தையின் எடை குறைவதால் 45 விழுக்காட்டினருக்கே அறுவைப் பேறு தேவைப்படுகிறது.
பிரசவத்திற்குப் பின் ஏற்படுகிற உதிரப் போக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கே அதிகமாக காணப்படுகிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களில் 15 விழுக்காட்டினருக்கு மேற்பட்டவர்கள் இப்பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரை வியாதியும் கர்ப்ப பாதிப்பும்
» சர்க்கரை வியாதியும் கர்ப்ப பாதிப்பும்
» சர்க்கரை வியாதியும் பாலியல் பிரச்சனைகளும்!
» சர்க்கரை நோயும் நரம்பு வியாதியும்
» சர்க்கரை வியாதியும் பாலியல் குறைபாடும்
» சர்க்கரை வியாதியும் கர்ப்ப பாதிப்பும்
» சர்க்கரை வியாதியும் பாலியல் பிரச்சனைகளும்!
» சர்க்கரை நோயும் நரம்பு வியாதியும்
» சர்க்கரை வியாதியும் பாலியல் குறைபாடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum