வினோத' விநாயகர்
Page 1 of 1
வினோத' விநாயகர்
மூல முதல் பொருளாக வணங்கப்படும் விநாயகப் பெருமானுக்கு அனைத்து கோவில்களிலும் சிறப்பிடம் உண்டு. சில திருத்தலங்களில் விநாயகர் வித்தியாசமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
* திருச்சி அருகே உள்ள குணசீலம் என்ற ஊரில் அமைந்துள்ள தார்மீகநாதர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் விநாயகருக்கு, வழக்கமாக யானைக்கு உள்ளதுபோல் பக்கவாட்டில் கண்கள் இல்லை. மாறாக, மனிதர்களை போல் நேரிடை பார்வையாக அமையப்பெற்றுள்ளது. பக்தர்களின் குறையையும், அவர்களின் வேண்டுதலையும் நேருக்கு நேர் பார்த்து தீர்த்து வைப்பவர் என்பதால் அந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
* வட மாநிலமான புனே- நாசிக் சாலையில் ஜுன்னர் என்ற இடத்தில் மலை மீது விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. லேனாத்ரி என்ற மலை மீது உள்ள இந்த கோவிலில் `கிரிஜாத்மத்' என்ற பெயரில் விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகருக்கு புருவத்தின் மத்தியில் ஒரே ஒரு கண் மட்டும் உள்ளது. இவரை நெற்றிக்கண் விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.
* கம்போடியா நாட்டில் விநாயகர் பெருமானை `ப்ராஹ் கணேஷ்' என்று அழைக்கின்றனர். இங்குள்ள சந்தன மலையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இருக்கும் விநாயகருக்கு மூன்று கண்கள் உள்ளன. வலது கரத்தில் ஒரு தந்தத்தை ஏந்தியபடியும், இடது கரத்தில் கமண்டலத்துடனும், மேல் இரு கரங்களில் திருவோடு, கரண்டி ஆகியவையுடனும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வினோத' விநாயகர்
» ஹூ லாஃபிங்கின் டாக்டர் டூலிட்டிலும், வினோத விலங்கும்
» இசை விநாயகர்
» விநாயகர் வழிபாட்டு முறைகளும் விநாயகர் திருத்தலங்களும்
» கல்யாண விநாயகர்
» ஹூ லாஃபிங்கின் டாக்டர் டூலிட்டிலும், வினோத விலங்கும்
» இசை விநாயகர்
» விநாயகர் வழிபாட்டு முறைகளும் விநாயகர் திருத்தலங்களும்
» கல்யாண விநாயகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum