தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி

Go down

மரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி Empty மரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி

Post  meenu Mon Feb 25, 2013 5:54 pm

மரண பயமற்ற வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வு என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் 40, 50 வயதைக் கடந்தவர்கள் - அவர்கள் எவ்வளவு நல்ல உடல் நலம் பெற்றிருந்தாலும் - பின் மனதில் இந்த மரண பய ரேகை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாக்குக்கு ஏற்ற உணவு, நேரத்தில் உணவு உட்கொள்ளும் வாய்ப்பு, போதுமான தூக்கம், காலையிலோ அல்லது மாலையிலோ உடற்பயிற்சியில் ஈடுபடும் வழக்கம் ஆகியன இருந்தும், நாம் வளர்த்த உடலையே நம்ப முடியாத ஒரு வாழ்க்கை பலருக்கும் உள்ளது.

எனவே மரண அச்சத்தை தாண்டிய உறுதியான உள்ளம் பெற ஒரு வழி நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. நமக்குள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மரண அபாயம் (Risk of Death) யாருக்கெல்லாம் அதிகம் உள்ளது என்பது குறித்து மருத்துவ உலகம் பல ஆய்வுகளைச் செய்துள்ளது. அதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு அளவு கோல்களில் மிகவும் நம்பத்தக்கதாக கருதப்படுவது உடல் எடைக் குறியீடு (Body Mass Index - BMI).

FILE
ஐ.நா. உலக நல அமைப்பு (WHO) அங்கீகரிக்கப்பட்ட உ.எ.கு. பல்வேறு ஆய்வுகளுக்கு அடிப்படையாகிறது. மரண அபாயம் மட்டுமின்றி, உடல் நலக் குறியீடாகவும், வறுமையை அளவிடும் அடிப்படையாகவும் உ.எ.கு. பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்துவரும் சமூகங்களை மதிப்பீடு செய்யும் பணியில் நீண்ட காலம் ஈடுபட்டவர் மருத்துவர் பினாயக் சென் (மாவோயிஸ்ட் என்று கூறி இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்). இவர் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, உ.எ.கு. ஒருவருக்கு 18க்கும் குறைவாக இருந்தால் போதுமான சத்துணவு இன்றி வாழ்ந்து வருகிறார் என்று பொருள். இந்த நிலையில் உள்ளவர்கள், இந்தியாவில் ஆண்கள் 33 விழுக்காடு, பெண்கள் 37 விழுக்காடு, குழந்தைகள் 45 விழுக்காடு என்றும் கூறினார். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த குறியீட்டை கண்டுபிடிப்பது எப்படி?

உ.எ.கு. என்பது ஒருவருடைய உடல் எடையை, அவருடைய உயர அளவை (மீட்டரில்) வர்க்கமாக்கினால் (Square) வரும் எண்ணைக் கொண்டு வகுத்தால் வரும் ஈவை, 100ஆல் பெருக்கினால் வருவதே அவருடைய உடல் எடைக் குறியீடாகும். உதாரணத்திற்கு ஒருவருடைய எடை 80 கி.கி., உயரம் 1.82 மீட்டர் என்றால், அவருடையை உடல் எடைக் குறியீடு கீழ்கண்டவாறு அளவிடப்பட வேண்டும்:

1.82 x 1.82 = 3.31

80 / 3.31 = 24.17

இந்த 24.17 என்பதே அந்த நபரின் உடல் எடைக் குறியீடாகும். இவர் நமது நாட்டின் கணக்குப்படி நல்ல சத்துணவு சாப்பிட்டு நலமாக இருப்பவர்.

ஆனால் அயல் நாடுகளில் இவரை நல்ல உடல் நலத்தோடு உள்ளவர் என்று கூறுவது மட்டுமின்றி, இவருக்கு மரண அபாயம் (Death Risk) இல்லாதவர் என்றும் கூறுகின்றனர்.

FILE
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உ.எ.கு. 20 முதல் 24.9 வரையிலுள்ளவர்கள் மரண அபாயமற்றவர்கள் என்றும், 25 முதல் 29.9 வரை உள்ளவர்களை மரண அபாயமற்றவர்கள் என்றாலும் கூட, அவர்கள் கூடுதல் உடல் எடை கொண்டவர்களாக உள்ளதால் அந்த அச்சுறுத்தல் உள்ளவர்கள் என்றும், 30க்கும் அதிகமாக உள்ளவர்கள் கொழுப்புடல் கொண்டவர்கள், மரண அபாயம் அதிகமுள்ளவர்கள் என்றும், 35க்கும் அதிகமான உ.எ.கு. கொண்டவர்கள் மரண ஆபத்து மிக அதிகமானவர்கள் என்றும் கூறியுள்ளது.

ஐ.நா.வின் உலக நல அமைப்பு (World Health Organization - WHO) 18.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. கொண்டவர்களை நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்கள் என்று கூறுகிறது. இது சத்துணவின்படியும், மரண அபாயமற்ற நிலையிலும் சரியான எடையாக கொள்ளப்படுகிறது. பொதுவாக உலக நாடுகள் பலவற்றில் 20 முதல் 24.9 வரை உடல் நலத்திற்கான அளவாக கொள்கின்றன.

அமெரிக்காவின் தேச புற்றுநோய் கழகமும், தேச நல்வாழ்வுக் கழகமும் உ.எ.கு. 30க்கும் அதிகமானவர்கள், அதாவது எடை மிக அதிமாக உள்ளவர்கள், உடல் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் (Obesity) உடல் நலக் கோளாறு அல்லது மரண ஆபத்து அதிகம் உள்ளவர்களெனக் கூறுகின்றனர்.

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல், 22.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. உள்ளவர்கள் (சாராசரியான) நீண்ட காலம் வாழ்பவர்களாகவும், அதே நேரத்தில் அதற்கு மேற்பட்ட உ.எ.கு. உள்ளவர்கள் மரண அபாயமுடையவர்களாக இருப்பதையும் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோய், இதய நோய், வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களில் அதிகம் பேர் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களே என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. எனவே உடலில் உள்ள கொழுப்பின் அளவை உ.எ.கு. பெருமளவிற்கு சரியாக காட்டும் கண்ணாடியாகவே உள்ளது என்பது பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட மருத்துவக் கருத்தாக உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum