தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


அறிவியல் உணர்ச்சியும் ஆன்மீக உணர்வும்

Go down

அறிவியல் உணர்ச்சியும் ஆன்மீக உணர்வும் Empty அறிவியல் உணர்ச்சியும் ஆன்மீக உணர்வும்

Post  meenu on Mon Feb 25, 2013 2:45 pm


த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பொதுவாக எது விஞ்ஞானம், எது ஆன்மீகம் என்று பார்க்கப்போனால், ஆங்கிலத்தில் One is objective, the Other is subjective என்பார்கள். இதன் பொருள், எதைப் பற்றி நீங்கள் ஆய்வு செய்கிறீர்கள், எதை ஆய்விற்கு உட்படுத்துகிறீர்கள் என்கின்ற கண்ணிற்குத் தெரிகின்ற அல்லது விஞ்ஞான பூர்வமான கருவிகளால் உணரப்படுகின்ற பொருட்களாகவே இருக்கக்கூடியதில்தான் விஞ்ஞானம் செல்கிறது. ஆனால், ஆன்மீகம் என்று பார்த்தால், கண்களாலோ, ஐம்புலன்காளலோ அல்லது திரிகரணங்களாலோ உணரப்பட முடியாமல் இருக்கக்கூடிய ஒரு Subjective Experience. மற்றவரிடம் காரணப்பூர்வமாக புரியவைக்க முடியாது. எப்படி விஞ்ஞானத்தில் இதயம் துடிக்கிறது, மூளையில் ஒருவிதமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்கிறீர்கள். ஆனால், சப்ஜெக்டிவாக இதுபோன்று ஏற்படக்கூடிய அனுபவம், உள்ளூர மனிதன் உணருகின்ற, நீங்கள் சொல்கின்ற ஆத்மார்த்தமான அந்த அனுபவம் வெளியில் சொல்ல முடியாத ஒன்றாக இருக்கிறது. நீங்கள் கான்ஷியஸ்னஸ் என்று ஒரு வார்த்தையை உபயோகப் படுத்தினீர்கள். நீங்கள் விஞ்ஞானத்தில் அவருக்கு கான்ஷியஸ் இருக்கிறதா என்று உணர்ச்சி என்கின்ற அடிப்படையில் சொல்கிறீர்கள். ஆன்மீகத்தில் அதையே உணர்வு என்கின்ற பெருநிலையில் சொல்கிறார்கள். அதிலும் பல்வேறுபட்ட நிலையிலான உணர்வு என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், எந்த இடத்தில் நீங்கள் சொல்லக்கூடிய கான்ஷியஸ்னஸ் விஞ்ஞான அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. எந்த அடிப்படையில் ஆன்மீகத்தில் சொல்லப்படக்கூடிய கான்ஷியஸ்னஸ் இந்த இடத்தில் பொருளாகிறது என்பதை ஆழமாக விளக்குங்கள்.

FILE
நர‌ம்‌பிய‌ல் ‌நிபுண‌ர் ‌சீ‌னிவாச‌ன்: நீங்கள் குறிப்பிட்டீர்கள், சப்ஜெக்டிவ், அப்ஜெக்டிவ் என்று. ஆனால் விஞ்ஞானத்தையே நான் சப்ஜெக்டிவ் என்று சொல்கிறேன். எப்படி என்றால், ஒளி பார்ட்டிகிளாகவும், வேவாகவும் போகிறது என்று சொல்கிறார்கள். இது விஞ்ஞான உண்மை என்று சொல்கிறார்கள். மனிதர்கள் சப்ஜெக்டிவ் அனுபவத்தில் சொல்வதுதான் பார்ட்டிகிள், வேவ்ஸ் என்பதெல்லாம். ஒளி மாறுவதில்லை. நாம் பார்க்கின்ற தன்மையில்தான் ஒளி மாறுபடுகிறது. அப்படி பார்க்கும் சமயத்தில், இந்த கான்ஷியஸ்னஸை எடுத்துக்கொண்டால், நான் முன்பே சொன்னது போல, தன்னையும் தன்னை சார்ந்திருகின்ற பிரபஞ்சத்தையும் அறிக்கின்ற தன்மையைதான் கான்ஷியஸ்னஸ் என்று சொல்கிறோம்.

அறிகின்ற தன்மைக்கு இதுவரைக்கு‌ம் விஞ்ஞான‌ப் பூர்வமாக ஒரு ஆதாரமும் கிடையாது. உதாரணத்திற்கு, வாயில் ஒரு இனிப்பு ஒன்றை போட்டு அது எப்படி இருக்கிறது என்று எவ்வளவு சொன்னாலும் அது டிஸ்கிரிப்ஷன்தான், not a fact. நாமும் அந்த இனிப்பை சாப்பிட்டால்தான் அது என்னவென்று தெரியும். அந்த உணருகின்ற, அதாவது அவார்னஸ் போர்ஷன் விஞ்ஞானத்தையும் தாண்டியது, 21ஆம் நூற்றாண்டு வரையிலும். ஆனால், அந்த அவார்னஸுக்கு முன்னாடி இருக்கின்ற அவார்னஸையும், கான்ஷியஸ்னஸையும் இரண்டையும் சேர்த்து கான்ஷியஸ்னஸ் என்று சொல்கிறோம். மற்றபடி, Consciousness includes Awareness. இந்த கான்ஷியஸ்னஸ்தான் விஞ்ஞானப்பூர்வமாக எங்களால் படிக்க முடிகிறது.

கான்ஷியஸ்னஸையும், செல்ஃப் அவார்னஸையும் 5 பகுதிகளாக நாங்கள் பிரித்திருக்கிறோம். ஒன்று, நேற்று இன்று நாளை என்று சொல்கின்ற தன்மை நம்முடைய கான்ஷியஸ்னஸ்ல்தான். விஞ்ஞானத்தில் கிடையாது. ஆனால் நமக்கு அந்த கான்ஷியஸ்னஸ் இருக்கிறதால் நேற்று இன்று நாளை என்பதை தொடர்ச்சி என்று சொல்கிறோம். இரண்டாவது, நாம் பார்க்கின்ற, கேட்கின்ற, தொடுகின்ற, உணருகின்ற எல்லாவிதமான ஐம்புலன்களின் உணர்ச்சிகளும் ஒன்றாதல் வேண்டும். அப்படி ஆனால்தான் உணர்ச்சி. இல்லையென்றால், கேட்பது தனியாக இருக்கும், பார்ப்பது தனியாக இருக்கும், உணர்வது தனியாக இருக்கும். அதனால் இந்த யூனிட்டி ஆஃப் ஆல் சென்சேஷன்ஸ், இந்த கான்ஷியஸ்னஸ் செய்கிறது.

மூன்றாவதாக முக்கியமாக என்ன செய்கிறதென்றால், அவ்வளவு கான்ஷியஸ்னஸூம் நம்முடைய உடம்பிற்கு சொல்கிறது. This is what called Identity with Body. இது மூன்றாவது செயல். இதற்கெல்லாம் Structure இருக்கிறது மூளையில். நான்காவது, I am aware of myself. I am alive, and I am speaking and I am conscious. இதனை Reflective Nature of Consciousness என்று சொல்கிறோம். ஐந்தாவது, நாம் நினைத்தால்தான் அசையும். நாம் நினைத்தால்தான் பேசுவோம். நாம் நினைத்தால்தான் பார்ப்போம். இதெல்லாம் கடைசியாக மனிதனுக்கு வழங்கப்பட்ட கான்ஷியஸ்னஸில் இருந்து செயல்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum