பட்டாசுப் புகையினால் நுரையீரல் பாதிக்கப்படும்
Page 1 of 1

தீபாவளிக் கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியமான பகுதி பட்டாசு வெடிப்பது, மத்தாப்பு கொளுத்துவது, ராக்கெட் உள்ளிட்ட வண்ணமயமான பல வெடிபொருட்களை நாம் கொளுத்தி மகிழ்வது, ஆனால் இந்தப் புகையினால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டாசுப் புகையில் கார்பன் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, மற்றும் சல்பர் டையாக்சைடு ஆகிய நச்சு வேதிப்பொருட்கள் உள்ளன. இதனால் நுரையீரலின் மூச்சுக்காற்று செல்லும் பாதைகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஏற்கனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இந்தப் புகை கூடவே கூடாது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது வெறும் நுரையீரல் பிரச்சனை மட்டுமல்ல, காடுகள் செவிடாகும் வாய்ப்பும், உயர் ரத்த அழுத்தமும், தூக்கத்தில் தொந்தரவுகள், ஆகியவையும் ஏற்படுகின்றன. இருதய நோயாளிகள் இருந்தால் திடீரென அது நாள் வரை இல்லாத பெரிய சப்தத்துடன் கூடிய வெடி மாரடைப்பையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் அன்றைய தினம் சாலைகளிலும், தெருக்களிலும் குவியும் குப்பைகளின் அளவு பயங்கரமானது. நரகாசுரனை வீழ்த்திய தினம் குப்பை தினமாகவும் சுகாதாரக் கேட்டின் தினமுமாக இருக்கவேண்டிய அவசியம் என்ன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் பட்டாசுக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர்.
இன்னும் ஒருசிலர் கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்க வீட்டினுள்ளேயே மத்தாப்பு கொளூத்தி புகையை கிளப்புவார்கள் இது மிக மிக ஆபத்தான செயலாகும். சிறுவர்களின் நுரையீரலை இது மிகவும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
பட்டாசுகள் வயதானவர்கள் முதல், குழந்தைகள் வரை விலங்குகள், வீட்டு வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தீங்கானது, இதனால் பட்டாசை தடை செய்யவேண்டும் என்றும் இந்தியாவில் ஆங்காங்கே குரலெழுப்பப்படுகின்றன.
காற்றில் அன்றைய தினம் கலக்கும் நச்சுப் புகையின் அளவு மிகவும் அதிகமாகும் ஏற்கனவே வெப்ப வாயு வெளியேற்றத்தினால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதோடு, பனிமலைகள் உருகி வருகின்றன. இதில் அன்றைய தினம் மட்டும் வானிற்குச் செல்லும் கரியமிலவாயுவின் அளவு பற்றி கணக்கிடப்படவேண்டும்.
இந்தியாவில் நுரையீரல் நோய்கள் இப்போது அதிகமாகி வருகிறது. கடைசியாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பட்டௌடி மூச்சு விடமுடியாமல் நுரையீரல் நோயினால் மரணமடைந்ததை நாம் அறிவோம்.
நுரையீரல் பாதிப்பினால் ஆஸ்துமா நோய் தற்போது அதிகரித்து வருகின்றன. சிறு குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நுரையீலைப் பாதிக்கும் பட்டாசுகளை நாம் வெடிக்கத்தான் வேண்டுமோ? பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அன்றைய தினம் பட்டாசு அல்லாமல் படைப்பார்வத்தை தூண்டும் கலைகளில் ஏதாவதொன்றைக் கற்றுக் கொடுக்கலாமே?

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பட்டாசுப் புகையினால் நுரையீரல் பாதிக்கப்படும்
» டீசல் வாகனத்தின் புகையினால் புற்றுநோய் ஆபத்து .
» முதுகுவலியால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்கள்
» பெருமூளை வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்படும் `கர்ப்ப' குழந்தைகள்
» நுரையீரல் நுரையீரல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum