40 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
Page 1 of 1
40 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
திருமணம் முடிந்தவுடன் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தைப்பேறு. நமது நாட்டைப் பொறுத்தவரை 75 சதவீத தம்பதிகளே திருமணமான முதல் ஆண்டில் குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இரு ஆண்டிற்குள் 85 சதவீத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
பொதுவாக பெண்கள் 21 வயதிலிருந்து 27 வயதுக்குள் குழந்தைப் பெற்றுக் கொள்வது தாய்க்கு ஆரோக்கியம். இந்த வயதில் இருக்கும் பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியில் பாதிப்பு இருக்காது. இந்த வயதுக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. ஓராண்டு முன்னே பின்னே இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடாது.
சமீபகாலமாக திருமணமான வேலை பார்க்கும் பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப் போடுவதைப் பார்க்க முடிகிறது. 20,21 வயதில் திருமணமான பெண்கள் இப்படி குழந்தை பேற்றை தள்ளிப் போடலாம். ஆனால் 30,35 வயதில் திருமணம் செய்து கொண்டு, நாற்பது வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது காலகாலமாய் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும்.
ஏனெனில் வயது கூடக் கூட சிறிய குறைபாடுகள் கூட பெரிய குறைபாடுகளாக மாறக் கூடும். பெண்களென்றால் சினை முட்டை உற்பத்தி குறைந்து விடும். ஆண்களென்றால் உயிரணுக்களின் உயிரோட்ட வேகம் குறைந்து விடும். முப்பது வயதில் கல்யாணம் செய்து கொண்டவர்கள் இயற்கையாகவே குழந்தைப்பேறு நமக்கு இருக்கும் என்று மூன்று, நான்கு வருடங்கள் காத்திருக்கக் கூடாது.
காலம் தாழ்த்திய அல்லது பருவம் கடந்த திருமணம் என்றால் ஆண், பெண் இருவருமே உரிய மருத்துவ சோதனை செய்து கொள்வது பின்னால் சில பிரச்சனைகள் வராது தடுக்க உதவும். திருமணத்திற்கு முன் தெரிந்தோ, தெரியாமலோ முறையற்ற உறவுகளில் ஈடுபட்டிருந்தால் பால்வினை நோய்கள் தாக்கம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் உயிரணு எண்ணிக்கையை சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்கள் ஏதேனும் குறைகள் இருப்பதை நிவர்த்தி செய்து கொண்ட பின்னரே, இல்லறத்தில் ஈடுபட வேண்டும் அப்போது தான் இனிய மணவாழ்க்கை அமையும்.
நாகரிகம் என்ற பெயரிலும் பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற பெயரிலும், திருமணத்திற்கு முன்பே ஆண்களுடன் ‘டேட்டிங்’ வைத்துக் கொள்ளல் மற்றும் பிற ஆண்களுடன் உறவு ஏதேனும் வைத்திருந்தால் பால்வினை நோயின் தாக்கம் இருக்கிறதா என்று பெண்கள் சோதனை செய்து கண்டறிந்து கொள்வது நல்லது. இன்னமும் சொல்லப்போனால், எந்தத் தவறும் செய்யாத ஆணும், பெண்ணும் கூட, திருமணத்திற்கு முன் உயிரணு சோதனை, கருக்குழாய் சோதனை ஆகியவைகளைச் செய்து கொள்வது நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 40 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
» இதய நோய் இருந்தாலும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
» இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?: மருத்துவர்கள் ஆலோசனை

» மனைவி கர்பமாக இருக்கும் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum