தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிக்கன் சம்பல்

Go down

சிக்கன் சம்பல்                      Empty சிக்கன் சம்பல்

Post  ishwarya Mon Feb 25, 2013 1:51 pm

* சிக்கன் - அரை கிலோ
* காய்ந்த மிளகாய் - 10
* வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
* எலுமிச்சை - ஒன்று சிறியது
* கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
* மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
* தக்காளி - ஒன்று
* சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
* எண்ணெய் - பொரித்தெடுக்க
* உப்பு - தேவையான அளவு

* வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி பச்சை மிளகாயை கீறியும் வைக்கவும்.காய்ந்த மிளகாயை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும்.

* சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் மற்றும் பாதி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.சிறிதளவு எண்ணெயில் மிளகாய் விழுதை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

* ஊறவைத்த சிக்கனை அரை வேக்காடாக பொரித்தெடுக்கவும்.மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

* இதனுடன் வதக்கி வைத்துள்ள மிளகாய் விழுத்து சேர்த்து வதக்கவும்.கரம் மசாலா சேர்த்து பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பிறகு எண்ணெய் மேல வந்ததும் இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum